பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இ. புலவர் கா. கோவிந்தன் வலிக்கும் பொறி, அதில் உச்சி அடைந்தாரைக் கழுத்தில் மாட்டி இறுக்கி உயிர் போக்கும் இடுக்கிப் பொறி, ஆண்டளைப் புள் வடியில் இருந்து பகைவரைக் கண்ட அளவே பறந்து போய் அவர் தலையைக் கொத்திப் பறிக்கும் பொறி; மதில் மீது இவர்வாரை மறித்து மறித்துத் தள்ளும் இருப்புக்கவை; கழுக்கோல்; அம்புக்கட்டு, அம்பு அறாத்துரணிகள்; மதிலைப் பற்றுவார் கையைக் குத்திக் குத்தித் துன்புறுத்தும் ஊசிப்பொறி, மீன் கொத்திப் பறவை உருவில் இருந்து மதில் உச்சியை அண்ணாந்து நோக்குவார் கண்களைக் குத்திப் பறிக்கும் சிச்சிலிப் பொறி, பகைவர் உடலைக் குத்திக் கிழிக்கும் பன்றிப் பொறி, பகைவர் தலைகளைத் தாக்கித் தகர்த்து உயிர் போக்கும் தடிப்பொறி, கோல், குந்தம்; வேல்; அரண் மதிலில் தமிழர்கள் அமைத்திருந்த அரியபெரிய பொறிப் படைகளுள் சிலம்பு வாயிலாக அறியக் கிடப்பன இவை, "மிளையும் கிடங்கும் வளைவில் பொறியும் கருவிரல் ஊகமும் கல்உமிழ் கவணும்; பரிவுறு வெந்நெய்யும் பாகுஅடு குழிசியும் காய்பொன் உலையும் கல்இடு கூடையும் துண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் சுவையும், கழுவும், புதையும், புழையும், ஐயவித் துலாமும், கைபெயர் ஊசியும், சென்று எறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும், சீப்பும், முழுவிறல் கணையமும், கோலும், குந்தமும், வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து. -சிலம்பு 15:207-217 மதில் அமைப்பு இத்தகையதாக, அரனுட் புக அம்மதிலின் இடையிடையே அமைத்திருந்த வாயில்களும்,