பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 179 அவ் வாயில்களுக்குப் பொருத்தி யிருந்த கதவுகளும், தமிழர்களின் போர் அறிவின் பெருமையினைப் பறை சாற்றுவனவாய்த் திகழ்ந்தன. நாற்படையுள் நனிசிறந்து விளங்கும் தேர்ப் படை, தன் மீது பறக்கும் வெற்றிக் கொடியும் விரித்த வெண் கொற்றக் குடையும் தாழாதே உட்புக வல்ல உயர்வும் உருவகமும் உடையவாக அமைக்கப்பட்ட அவ்வாயில்கள், பகைநாட்டு ஒற்றர்களும், பகைவர்களும் தம் உருவு கரந்தும் உட்புகுந்து விடாதபடி விழிப்போடிருந்து காக்க வல்ல யவன வீரர்களின் காவலுக்கு உட்பட்டிருந்தன. “அரசர்காள்! அமர் புரிந்து இவ்வரணைக் கைப்பற்றுவது ஆகாது: ஆகவே அவ் வெண்ணம் கைவிட்டு அகன்று வாழுங்கள்; அணுகுவீரேல், நீங்கள் ஆற்றல் இழப்பது உறுதி; அந்நிலை உண்டாகிவிடின் உம்மை வாளாப் போகவிடுவே மல்லேம், தோற்ற உங்கள் காலில் வீரக்கழலைக் களைந்து, விளையாடும் மகளிர்க் குரிய சிலம்பைப் பூட்டுவோம். மார்புக் கவசத்தை மாற்றித் தழையாடை சூட்டுவோம்; கையில் உள்ள வாளையும் வேலையும் அகற்றி, ஆடி மகிழுங்கள் எனப் பந்தும் பாவையும் திணித்து உம்மை மகளிராக்கி மானம் இழக்கப் பண்ணுவோம்!" எனக் கூறாமல் கூறி, அரணகத்து ஆற்றல் மறவரின் ஆண்மையைப் பறைசாற்றும், தண்டையும், தழை ஆடையும், பந்தும், பாலையும் அவ்வாயில்கள்தோறும் தொங்கவிடப்பட்டிருக்கும். "வரிப்புனை பந்தொடு பாவை துரங்கப் பொருநர்த் தேய்த்த போர் அறா வாயில்” (திருமுருகாற்றுப்படை 68-69), "செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை துரங்கும், எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்” (பதிற்றுப் பத்து 53: 6-7) என்ற தொடர்களைக் காண்க. - --