பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஆ. புலவர் கா. கோவிந்தன் இவ்வாயில்களை அடைக்கப் பயன்படும் கதவுகள், பகைப் படையைச் சேர்ந்த யானைகள் ஒருசேர வந்து தாக்கினாலும் தகர்ந்து போகாத்திண்மை யுடையவாய்த் திகழ்ந்தன. பலகைகள் ஒன்றோடொன்று நன்கு பொருத்தப் பெற்றன. தாழ்கள் தனியே செய்து, பொருத்தப் பெறாமல், கதவுகள் அமைக்கும் போது, அக்கதவுகளோடே கடைந்து அமைக்கப் பெற்றன. மோதி அழிக்க முனையும் பகைப் படையின் மத யானைகளின் மத்தகத்தைப் புண்ணாக்க வல்ல பெரியவும் சிறியவுமாய ஆணிகள் பல, அக் கதவுகளில் வரிசை வரிசையாக, அழுத்தப் பெற்றிருந்தன. அம் மட்டோ! “எம் அரசனோடு பகை கொண்டு வாழ்ந்த மாற்றரசர் பட்ட பாட்டினைப் பாருங்கள் !’ எனப் பகையரசர்க்கு அச்சம் ஊட்டும் வகையில் அரணுக்கு உரிய அரசர்கள் போரில் பெற்ற வெற்றிப் பொருள்களை, வாயிற் கதவுகளில் அழுத்தி வைப்பதும் மேற்கொண்டிருந்தார்கள். சேரநாட்டுத் தொண்டி நகரத்து வாயிற் கதவில், அச்சேரர் பகைவனாம் மூவன் என்பான் பற்கள் பொறித்து வைத்திருந்த நிகழ்ச்சியையும், சோனாட்டு வெண்மணி வாயில் என்னும் நகரத்து வாயிற் கதவில், அந்நகரத்துக்கு உரியோனாகிய மத்தி என்பானின் பகைவனாகிய எழினி என்பானின் பற்கள் பொறித்து வைத்திருந்த நிகழ்ச்சி யையும் பழந்தமிழ் நூல்கள் பாராட்டியுள்ளன. "மூவன் முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின் கானலம் தொண்டி" -நற்றிணை: 18. 2-4. “கல்லா எழினி பல்எறிந்து அழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில்” -அகம் 211, 13-14.