பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 181 நாடு நகரங்களின் காப்பு நிலை, இவ்வாறு அரனைப் பொறுத்தே அமைந்திருந்தமையால், அரனுக்கு உரியவன் அதனைக் காப்பதிலும், அவன் பகைவன் அதனை அழிப்பதிலும் தம் ஆற்றல் அனைத்தையும் காட்டுவாரா யினர். அதனால், அரண் காக்கும் போரும், அதன் அழிவுப் போரும் அரண் அமைந்த இடத்தில் நிகழ்வவாயின. மக்களையும் தம்பால் ஈர்த்துப் பொறாமை கொள்ளச் செய்யுமளவு, பொன்னும் நவமணியும் போலும் அரும் பொருள்கள் பெருமளவில் குவிந்து கிடப்பது பேரூர்களிலேயே ஆம் ஆதலாலும், அப்பொருள்களைப் பகைநாட்டவர் கொள்ளை கொண்டு போகாவாறு அரண் அமைத்துக் காப்பதும் ஆண்டே நிகழும் ஆதலாலும், அரண் அழிக்க முனைவதும், ೨15) காக்க முனைவதுமாகிய போர்கள் நிகழ்வது ஆண்டே ஆதலாலும், பேரூர்கள், தொடக்க நிலையில் தோன்றி வளர்ந்தது, ஆற்றுப் பாய்ச்சலால் வளங்கொழிக்கும் மருத நிலப் பகுதியில் ஆதலாலும், நகரங்கள் ஆண்டு இடம் பெறுவதே உலகெங்கும் காணலாம் நிகழ்ச்சியாகும் ஆதலாலும், அரண் கருதி நிகழும் போர்கள் அம்மருத நிலத்து நிகழ்ச்சியாய் அந்நிலத்து மக்களின் புறவொழுக்கமாயின. ஆகவே, ஆசிரியர் தொல்காப்பியனார் "உழிஞைதானே மருதத்துப் புறனே” என்றார். ‘பணிவார் சிமையக் கானம் போகி அகநாடு புக்கு அவர் அருப்பம் வெளவி" -மதுரைக் காஞ்சி. 148-49 "பிணங்குகதிர்க் கழனி நாப்பண் எமுற்று х உணங்குகலன் ஆழியின் தோன்றும் ஒர் எயில்" -புறம் 388.