பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 ళ புலவர் கா. கோவிந்தன் எனப், புலவர்கள் அரண்களை மருத நிலத்து வைத்தே பாராட்டியிருப்பது காண்க. அரண் கருதி நிகழும் போர்களை விளக்கும் உழிஞைத் திணை, மருதம் என்ற அகத்திணைக்குப் புறன் ஆகியதன் காரணத்தைக் கூறவந்த ஆசிரியர் இளம்பூரணர், "மருதத்திற்கு இது புறனாயவாறு என்னையெனின், வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர் செய்தல் ஆற்றாது உடைந்து, மாற்று வேந்தன் அரண் வலியாகப் போர் செய்யுமாகலானும், அவர் நாட்டகத்து ஆகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியப் பொழுது காலமாக லானும் அதற்கு இது புறனாயிற்று," எனக்கூறிய விளக்கமும், ஆசிரியர் நச்சினார்க்கினியர், "இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்ட வழி எதிர்செலற்கு ஆற்றாது போய் மதிலகத்து இருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்தது ஆதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்து இருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்த வனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல் இதற்கும் பெரும் பொழுது வரைவின்மையானும், சிறுபொழுதினும் விடியற் காலமே போர் செய்தற்குக் காலம் ஆதலானும், உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று!" எனக் கூறிய விளக்கமும், அரண் நாகரிகம் மருத நிலத்து நாகரிகமாம் என்ற கொள்கைக்கு அரண் செய்து நிற்றல் அறிக. தங்கள் நாட்டையும் நகரையும், தாங்கள் வாழும் இடத்தையும் பகைவரிடமிருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு எழுந்தது நனி மிகப் பழைய காலத்தில். ஆனால், அவ்வுணர்வு உண்டாகிய அந்தக் காலத்திலேயே, அவர்கள் அத்தகைய அரண்களைத்