பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இ. புலவர் கா. கோவிந்தன் பொருந்தாது. தன் ஆண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாக வந்தானை வென்று அடக்கும் வேந்தன் செயலை விளக்கும்போது, ஆசிரியர் தொல்காப்பியனார், அவ்விரு நிகழ்ச்சிகளையும் முன்னும் பின்னும் நிகழும் ஒரே தொடர் நிகழ்ச்சியாகக் கொண்டு தும்பை என ஒரு பெயரே சூட்டி, முன்னைய திணைகளைக் கொண்ட முடிவிலேயே அடியொற்றி நின்றுள்ளாராக, பிற்கால இலக்கண ஆசிரியர்கள், முன்னைய திணை களைப் போலவே, ஈண்டும் அவ்விரு நிகழ்ச்சிகளையும் இரு வேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டு இரு வேறு பெயர் கொடுப்பதே முறையாக, அவ்வாறு கொள்ளாமல், ஆசிரியர் தொல்காப்பியனார் கொண்டதே போல், அவ்விரு நிகழ்ச்சிகளையும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே கொண்டு, தும்பை என ஒரு பெயரே சூட்டி, முன்னைய முறைகளோடு முரண்பட்டிருப்பது, வெட்சி, வஞ்சி, உழிஞை முதலாயின குறித்து ஆசிரியர் தொல்காப்பியனார் கொண்ட முறையும் கூறிய விளக்கங்களுமே இயற்கை யோடு பொருந்தும், பிற்கால ஆசிரியர்கள் கொண்டது பொருந்தாது என்பதைத் தெளிவுற எடுத்துக் காட்டும். புறப்பொருள் இலக்கணத்தை விளக்க வந்த பிற்கால ஆசிரியர்கள், ஆனிரை கவர்தலும் மீட்டலும் ஆகிய நிகழ்ச்சிகளை இருவேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டு, கவர்தலை வெட்சியாகவும், மீட்டலைக் கரந்தையாகவும் கொண்டாலும், ஆசிரியர் தொல்காப்பியனார், அவ்விரு நிகழ்ச்சிகளையும் முன்னும் பின்னும் நிகழும் ஒரே தொடர் நிகழ்ச்சியாகக் கொண்டு அதற்கு வெட்சி என முன்னதன் பெயரால் பெயர் சூட்டியதைப் போலவும், மாற்று வேந்தன் மண்ணைக் கைப்பற்றலும், அம்மண்ணுக்குரிய மன்னவன் அதை மீட்டுக் கொள்ளலும் ஆகிய நிகழ்ச்சிகளை இருவேறு