பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 189 நிகழ்ச்சிகளாகக் கொண்டு, அதே ஆசிரியர்கள் தனித்தனிப் பெயர் கொடுத்துக் கொண்டாலும், ஆசிரியர் தொல் காப்பியனார், அவ்விரு நிகழ்ச்சிகளையும் முன்னும் பின்னும் நிகழும் ஒரே தொடர் நிகழ்ச்சியாகக் கொண்டு, அதற்கு வஞ்சி என முன்னதன் பெயரால் பெயர் சூட்டியதைப் போலவும், பிற்காலப் புறப்பொருள் இலக்கண ஆசிரியர்கள், பகையரசன் அரணை முற்றி வளைத்துக் கொள்வதும், அவ்வரனுக்குரிய அரசன் அம் முற்றுகையை ஒழித்துக் காத்துக் கொள்வதும் ஆகிய இரு நிகழ்ச்சிகளாகக் கொண்டு, முற்றி வளைப்பதை உழிஞை யாகவும், முற்றுகையை முறியடித்து அரணைத் தனதாக்கிக் கொள்வதை நொச்சியாகவும் கொண்டாலும், ஆசிரியர் தொல்காப்பியனார் அவ்விரு நிகழ்ச்சிகளையும் முன்னும் பின்னும் நிகழும் ஒரே நிகழ்ச்சியாகக் கொண்டு அதற்கு உழிஞை எனப் பின்னதன் பெயரால் சூட்டியுள்ளார். ஆனிரை கவர்தலும் மீட்டலும், மண்ணைக் கைப்பற்றலும் மீட்டலும் ஆகிய அவ்விடங்களில், முறையே வெட்சி, வஞ்சி என, அந்நிகழ்ச்சிகளின் முன்னிகழ்ச்சி களைக் குறிக்கும் பெயர்களால் பெயர் சூட்டிய ஆசிரியர் தொல்காப்பியனார், ஈண்டு மட்டும், அரண் வளைத்தலும், அது தவிர்த்தலும் ஆகிய நிகழ்ச்சிகளில் உழிஞை எனப் பின்னதன் பெயரால் பெயர் சூட்டியுள்ளார். இச்சிறு வேறுபாடு தவிர்த்து இம்மூன்று திணைகளை வகுத்து விளக்கும் நிலையில், ஆசிரியர் தொல்காப்பியனார் மேற் கொண்ட முறையில் ஒருமைப்பாடே நிலவுவது உணர்க. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் போலும் பிற்கால ஆசிரியர்கள், ஆனிரைப் போர் பற்றிய விளக்கத்தின் போதும், மண் குறித்த போர் பற்றிய விளக்கத்தின் போதும், அவ்விரு நிகழ்ச்சிகள் பற்றிய