பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 191 பாடாகும் என்பது, புறப்பொருள் வெண்பா மாலைக் கண் விளக்கப் பெறும் திணைகள் எவை எவை என்பது பற்றிய செய்தியை அளிக்கும், "வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குடை உழிஞை நொச்சி தும்பையென்று இத்திறம் ஏழும் புறம்என மொழிப; வாகை பாடாண் பொதுவியல் திணையெனப் போகிய மூன்றும் புறப்புறம் ஆகும்.” -சூத்திரம் 19. என்ற சூத்திரத்தில், "உழிஞை நொச்சி” என உழிஞையை முன்னாகவும், நொச்சியைப் பின்னாகவும் வைத்தே சூத்திரம் ஆக்கியிருப்பதால் உறுதியாவது காண்க. பிற்கால ஆசிரியர்களால் நொச்சி உழிஞை இருதிணைகளாகவும், ஆசிரியர் தொல்காப்பியனாரால் உழிஞை என ஒரு திணையாகவும் கொள்ளப்படும் அரண் குறித்த போர் பற்றிய பொது இயல்புகளைக் கண்ட நாம், இனி அதன் துறைகளின் அமைதி பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொள்வோமாக. கொள்ளார் தேயம் குறித்த கொற்றம் மலையினின்றும் உருண்டோடி வந்து கடல் புகும் கானாற்று வெள்ளம்போல், பரிசில் வேண்டித் தன்வாயிற் கண் நாள்தோறும் வந்து குவியும் பாணரும் கூத்தரும் பொருநரும் புலவரும் போலும் இரவலர் அனைவர்க்கும் அவர் தம் இன்முகம் காணும் வரையும் வாரி வாரி வழங்கத் தக்க பேருள்ளம் உடைய தன்பால், அவ்வாறு வழங்கத் தக்க பெருவளம் இல்லாதபோது அது பிறர்பால் குவிந்திருக்கக் காணும் வேந்தனே ஆயினும், வீரனே ஆயினும், அவனால் வாளா அடங்கியிருப்பது இயலாது.