பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இ. புலவர் கா. கோவிந்தன் அரணைக் காக்கக் கருதும் அவ்வரனுக்கு உரியான் செயல் அன்று என்பது தெளிவாகும். அரணை முற்றிக் கொண்ட மாற்று வேந்தனை வெற்றி கொண்டு அரணைக் காப்பதே உழிஞையாம் என்றால், அதை விளக்கும் குத்திரத்தில், அரணைக் கைப்பற்றத் துணிந்த நிகழ்ச்சியைக் கூறுவது பொருந்தாதே என்ற எண்ணம் எழுதல் இயல்பே. அது உண்மை என்றாலும், அரண் முற்றுகை இல்லாதபோது, அதை மீட்டலுக்கு இடம் இல்லை. ஆகவே, மீட்டலைக் கூறும் போது, அதன் முன் நிகழ்ச்சிகளையும் கூறவேண்டுவது முறையாதலின் அத்தகைய முன் நிகழ்ச்சிகளில் ஒன்றாகிய இதுவும், அச்சூத்திரத்தில் இடம் பெற்றுள்ளது எனக் கொள்க. ஆக, இது அரண் அழிப்போன் வினையே அல்லது அது காப்போன் வினை அன்று என்க. இனி வரும், அழிப்போன் வினை விளக்கும் துறைகளுக்கும் இதுவே கூறிக் கொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார், "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" என, நாடுபற்றிய நிகழ்ச்சியைக் குறிப்ப தாகவே கோடல் வேண்டும். நாடு பற்றியதாயின், அது வஞ்சி எனப்படுமே பன்றி உழிஞை எனப்படாது. பகையரண் ஒன்றைக் கைப்பற்றக் கருதும் அரசன் ஒருவன் அவ்வெண்ணம் வரப் பெற்ற அப்போதே அதை மேற்கொண்டு விடுவானல்லன். அது போர் முறையும் ஆகாது. கைப்பற்றக் கருதிய அரணின் அமைப்பு நிலை, அது அமைந்திருக்கும் இடத்தின் இயல்பு, அதைக்காத்து நிற்கும் படை வரிசையின் வன்மை, அதை முற்றி வளைத்தற்கு வாய்ப்புடைய காலம் ஆகியவற்றை ஆராய்ந்து நோக்கி, சென்று வளைத்துக் கொண்டால் வெற்றி உறுதி என