பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 195 எண்ணுமளவு தன் படை பலம் பெருகிய பின்னர், வாய்ப்புடைய காலமும் வந்து வாய்த்த பின்னரே விரைந்து சென்று வளைத்துக் கொள்வன். அவ்வாறு விரிவாக ஆராய்ந்து படையெடுத்துச் செல்லத் துணிந்த நிலையில், தானே செல்லமாட்டா ஒர் இடையூறு நேர்ந்தபோது, எடுத்த வினையில் இடை மடங்கல் கூடாது என்ற உணர்வால், தானாகவே மதிக்கத்தக்கனவும், தனக்கு இன்றியமையாதனவுமாகிய தன் வெண் கொற்றக் குடையினையும், வீரவாளினையும் முன்னே போகவிட்டுத் தான் பின்னர்ச் செல்வான். ஆகவே, அரண்போர் நிகழ்ச்சிகளின் விரிவும் விளக்கமும் கூறிவந்த சூத்திரத்தில், "குடையும் வாளும் நாள் கோள்” என வந்திருக்கும் குடை நாட்கோளும், வாள்நாட்கோளும் அரணை வளைத்துக் கொள்ள விரும்பிய வேந்தனுக்குரிய தொடக்க வினையைக் கூறும் "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" என்ற தொடரின் விரிவும் விளக்கங்களுமாய், உழிஞைப் போரின் தொடக்க நிகழ்ச்சிகளே ஆம் என்க. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரும், குடை நாட்கோள், வாள்நாட் கோள்களையும், அவற்றோடு தொடர்புடையவாகிய முரச உழிஞை, கொற்ற உழிஞை களையும் உழிஞைத் திணையின் தொடக்க நிகழ்ச்சி களாகவே கூறியிருப்பதும் உணர்க. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு: ஒரு வேந்தன், மாற்று வேந்தனுக்குரிய அரணைக் கைப்பற்றத் துணிந்து விட்ட நிலையிலும், அறப்போர் முறைகளை அறிந்த வேந்தனாயின், அவன், தன் ஆசையைப் போராடியே பெற நினைப்பானல்லன். அவன்