பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ళీ புலவர் கா. கோவிந்தன் இடமாகுக என்றும், தன்னாட்டுப் பொன்னும் நவமணியும், பல்வேறு உணவுப் பண்டங்களுமாகிய செல்வங்களைப் பேணிக்காக்கும் இடமாகுக என்றும் நாட்டின் இடையே சிறியவும் பெரியவுமாகிய அரண்களை அக்கால அரசன் அமைத்திருந்தான்; மண்ணாசை கொண்டு வந்த மன்னனை வென்று ஒட்டும் முதல் முயற்சியில் தோற்றுப் போன மன்னவன். அவனை வென்று ஒட்டும் வலிவும், இடமும், காலமும் வாய்க்கும் வரை, அவ்வரண் புகுந்து அடங்கியிருப்பன். நாட்டிற்கு உரியோன் செயல் அதுவாகவே, அந்நாட்டின் மீது ஆசை கொண்டு வந்தவன், அவன் அடங்கியிருக்கும் அவ்வரணை அழித்து அவனைப் பணி கொண்டாலல்லது தன் கருத்து நிறைவேறாது என்பதை உணர்ந்து அவ்வரணை வளைத்துக் கொண்டு அழிக்கத்தலைப்படுவன். பகைவன் அந்நாடு புகுந்து, தான் அடங்கியிருக்கும் அரணையும் வளைத்துக் கொண்டு விட்டான் என்பது கண்ட அந்நாட்டரசன், அப்பகைவன் எதிர்பாரா வகையில்; அரணை விட்டு வெளிப்பட்டு, அவன் படையைத் திடுமெனத் தாக்கி அழித்து வெற்றி கொண்டு விடுவன். இவ்வாறு, பொன்னாசை குறித்தோ, பெண் ஆசை குறித்தோ, மண் ஆசை குறித்தோ தன் நாட்டின் மீது படையெடுத்து வந்து, தான் அடங்கியிருக்கும் அரணை வளைத்துக் கொண்டானை, வென்று ஒட்டி அரணைக் காக்க அந்நாட்டு மன்னன் மேற்கொண்ட போர்க்கே, ஆசிரியர் தொல்காப்பியனார், உழிஞைப்போர் எனும் பெயர் கொடுத்து விளக்கியுள்ளார். மண், பெண், பொன் என்ற இம் மூவாசைகளுக்கு அப்பாற்பட்ட ஆசை எதுவும் மக்களுக்கு இல்லை என்று கூறிவிடுவதற்கு இல்லை."தோன்றின் புகழொடு தோன்றுக!"