பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 197 இன்னாது அம்ம! ஈங்கு இனிது இருத்தல், துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்! அறவை யாயின் நினது எனத் திறத்தல் மறவை யாயின் போரொடு திறத்தல்! அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதில் ஒரு சிறை ஒடுங்குதல் - நானுத் தகவுடைத்து இது காணுங் காலே." -புறம்: 44 அரண்போர் தொடங்க இருந்த அன்று விடியற் காலை. அந்தணன் ஒருவன் அரனுட் புகுந்து அடங்கி யிருப்பானுக்கு அறவுரை கூறியதன் விளைவாக, அரணகத்தான் அடங்கியிருப்பதை விடுத்து வாயில் திறந்து விட்ட நிகழ்ச்சியைப் புறத்தில் மதுரை வேளாசான் பாடியிருக்கும் பாட்டொன்று புலப்படுத்துவது காண்க. "வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே, அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி மாண்வினை யானையும் மணிகளைந் தனவே. புறம் 305 இவ்வாறு அரண் போர் தொடங்குவதன் முன்பே, அது தவிர்க்கத் துது விடுவது ஒரு புறம் இருக்க, அரண் போர் தொடங்கி நடைபெற்றிருக்கும் நிலையிலும், அது மேலும் நீளாமை கருதி, வந்த வேந்தன் வீரர்கள், தம் முன் நின்று போராடும் அரணுக்குரியானின் வீரர்கள் உள்ளத்தில் அச்சமும் நடுக்கமும் எழும் வகையில் தம் வேந்தனின் பெருமை பேராண்மைகளை எடுத்துரைப் பதன் மூலம், அவரைப் பணிய வைத்து அவ்வரனைக் கைப்பற்றிக் கோடலும் உண்டு.