பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 199 போயின என்பதை உணர்ந்ததும், அதைப் போராடிப் பெறத் துணிவன். பகைவனின் அடுத்த நிகழ்ச்சி அதுவாகவே இருக்கும் என்பதை அரணுக்கு உரியானும் அறிவானாதலின் அவன், அரண் வாயில்களை அடைத்துக் கொண்டு, அடங்கி விடுவன். அவன் செயல் அதுவாகி விட்ட நிலையில், அரணைக் கைப்பற்றக் கருதியவன் செய்ய வேண்டுவது காவற் காடுகளை அழித்து, கிடங்கினைத் துார்த்து, மதிலைக் கடந்து அரணகத்தை அடைவதே ஆம். இவ்வளவும் செய்ய வேண்டுமாயின், கொடி படர்ந்தால், பார்ப்பவர்க்குப் படர்ந்த கொடி புலப்படுவதல்லது, அது ஏறிப் படர்ந்திருக்கும் பொருள் புலப்படாததுபோல், அரணை நோக்குவார்க்கு அரண் புலப்படாது, பார்க்குமிடமெங்கும் படை வீரர்களே காட்சி தரும் வகையில், அரணை மிகப் பெரிய படைகொண்டு மொய்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைக் கூறுவதே, தொல்லெயிற்கு இவர்தல். ஈண்டு, மதிலை வளைத்துக் கொள்ளும் படையின் செயலை உணர்த்த, கொடியின் செயல் உணர்த்தும் இவர்தல் என்ற சொல் ஆளப் பட்டிருக்கும் நயம் உணர்தற்பாலது. பீரை நாறிய புரை இவர் மருங்கு" (புறம்: 1) பீர் இவர் வேலிப் பாழ்மனை" (பதிற்று: 26) ஆக, இதுவும் அரண் கொள்ளக் கருதும் பகையரசன் செயலே யல்லது, அரனுக்குரியான் செயலாகாது என்க. - - - - அரணகத்து மதில் மீது ஏறுவதன் முன், அவ்வரணுக்கும் அரணாக இருப்பனவாகிய காவற் காட்டின் கண்ணும், கிடங்கின் கண்ணும் நின்று காவல் புரிவாராகிய அரண் வீரர்களை வெற்றி கொள்ள வேண்டுவதும், அவர்களை வெற்றிகொண்ட பிறகு, அரண்