பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புலவர் கா. கோவிந்தன் மதிலுக்கு ஏணி அமைத்து ஏறவேண்டுவதும் இன்றியமை யாதவாதலின், உழிஞைத் திணையின் விளக்கம் கூறும் இரண்டாவது சூத்திரத்தில் இடம் பெறும், "மடையமை ஏணிமிசை மயக்கமும்,” “கற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதர்வும்" என்ற இரண்டு துறைகளும், தொல் எயிற்கு இவர்தல் என்றதன் விரிவும் விளக்கங்களுமேயாம் என்க. "மறத்துறை மலிந்து மண்டி மாற்றார் விறற் கொடி மதிலின் புறத்திறுத்தன்று” என்பதைக் கூறும் புறத்திறை, "வாஅள் மறவர் வணங்காதார் நீஇள் மதிலின் நிலையுரைத் தன்று” என்பதைக் கூறும் ஆரெயில் உழிஞை, "கருதாதார் மதிற்குமரி மேல் ஒரு தானாகி இகல் மிகுத்தன்று” என்பதைக் கூறும் குற்றுழிஞை, "விண்தோயும்மிளை கடந்து குண்டு அகழிப் புறத்திறுத் தன்று” என்பதைக் கூறும் புறத்துழிஞை, “தொடு தழல் மறவர் துன்னித், துன்னார் இடுஆட்டு இஞ்சியின் ஏணிச் சாத்தின்று,” என்பதைக் கூறும் ஏணிநிலை, "அகத்தோன் காலை அதிர்முரசு இயம்பப் புறத்தோன் வெஞ்சினப் பொலிவுரைத்தன்று” என்பதைக் கூறும் முற்றுமுதிர்வு ஆகிய பு.வெ. மாலைத் துறைகளும் இதன் கீழ் அடங்கும் என்க. தோலது பெருக்கம்: பகைவன், பெரும் படைகொண்டு, தன் அரணை வளைத்துக் கொண்டுள்ளான் என்பது உணரும் அரணுக்கு உரியவன், புறத்தே வளைத்து நிற்கும் அப்பெரும் படையினை அழிக்கும் பணியினை மேற்கொள்வன். புறத்தே நிற்பது கபிலர் கூறுவது போல், மரந்தொறும் பிணித்தகளிறும், புலந்தொறும் பரப்பிய தேரும் கொண்ட பெரும் படையே யாயினும், அதனை எளிதில் அழிக்கும்