பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புலவர் கா. கோவிந்தன் “இன்னும் அரணைக் கைப்பற்றாமல் இருப்பது இழுக்காகும்; அரண்கொள்ளும் முயற்சியைத் தோல்படை மேற்கொண்டால் அது எளிதாகி விடும்” என்று கூறினான் ஒரு வேந்தன் என்று பொருள் பட வரும் பு:வெ. மாலைச் செய்யுளும், அரண் முற்றுகையில் படையின் தோள் வலிமையினையே மிகுத்துக் கூறுவதும் காண்க. “நின்றபுகழ் ஒழிய, நில்லா உயிர்ஓம்பி இன்றுநாம் வைகல் இழிவாகும் - வென்று ஒளிரும் பாண்டில் நிரைதோல், பணியார் பகையரணம் வேண்டின், எளிது என்றான் வேற்று.” ஆக, இதுவும் புறத்தோன் செயல் உணர்த்துவதே யல்லது அகத்தோன் செயல் உணர்த்துவது அன்று என அறிக. இந் நான்கு முற்றுவோர்க்கே உரிய வெனக் கொள்க’ என நச்சினார்க்கினியர் கூறுவதும் ಹT6ಳು75, அகத்தோன் செல்வம்: அரணை வளைத்துக் கொண்டு, புறத்தே பாடி கொண்டிருக்கும் பகைப் படை, இறுதியாக, அரணைத் தாக்கத் துணிந்துவிட்டது என்பதை அரணுக்கு உரியான் கண்டு கொண்டதும், அத்தாக்குதலைத் தாங்குவதற்கு ஏற்புடையவற்றை மேற்கொள்ளத் தொடங்குவன், அரண் முற்றுகை எத்துணை காலம் நீளுவதாயினும், அரணகத்து மக்கள் அது குறித்துக் கவலை கொள்ளாது வாழ்தற்கு வேண்டும் பொருள்கள் பலவற்றையும் பெருமளவில் ஈட்டி வைப்பன். அம்முயற்சி ஒரு பால் நிகழ்ந்து கொண்டிருக்க, அரண்மதில்கள் பகைப் படையால் பாழுற்றுப் போகாத படி அம் மதிலகத்தே பல்வேறு பொறிப் படைகளைப் பொருத்துவதை மேற்கொள்வன், இம் முயற்சிகளில் நிறைவு