பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 205 பயனற்றதாக்க வல்ல புதிய போர் முறைகளைக் கைக்கோடல் வேண்டும். 'ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல்மீதிலும் ஆணை செலவே நிற்பர்” என்பதே அரசர்க்கு ஒதிய இயல்பு ஆதலின், அரண்கோடல் கருதிய அரசன், பெரும்பாலும், முன்னதைக் காட்டிலும் பின்னதை மேற்கொள்வதே இயல்பாம். ஆகவே, முற்றியிருக்கும் வேந்தனை, அகத்தோன் எதிர்பாரா வகையில் தன் போர்முறைகளில் புதுமுறைகளைப் புகுத்திப் போரிடத் துணிவன். உழிஞைத் திணையின் விளக்கம் கூறும் இரண்டாவது சூத்திரத்தில் வரும் "புயத்தோன் வீழ்ந்த புதுமை" என்ற துறை இதைச் சுட்டுவதேயாம். புதுமுறைகளை வேந்தன் விரும்பி விட்டால் மட்டும் போதாது. அவன் விரும்பும் இப்புது முறைகளை, அவன் படைத் தலைவரும், அப்படைத் தலைவர்களின் கீழ்ப் பணிபுரியும் போர் வீரர்களும் விரும்புதல் வேண்டும். அப்பொழுதுதான் அப்புது முறைகளும் பயனளிக்கும். அரணைத் தாக்க முனைவதற்கு முன்பே ஆராய்ந்து பார்க்க வேண்டுவ அனைத்தையும் ஆராய்ந்து பார்க்காது, மேற்கொண்ட போர் முறை ஒவ்வொன்றும் பயனற்றுப் போகக் கண்டு, ஒவ்வொன்றாகக் கைவிட்டுப் புதுப்புது முறைகளை மேற்கொள்வதைக் காணும் அவன் படைவீரருக்கு, அவன் தலைமையில் நம்பிக்கை அற்றுப் போக, அவன் மேற்கொள்ளும் புதுமுறைகளை மேலும் பின்பற்ற மறுப்பது இயலக் கூடியதே. ஆனால், போர் நிகழ்போதில் ஒரு படை வரிசையில், அத்தகைய இடர்நிலை இடம் பெறுவது ஆக்கத்திற்கு வழிகோலுவ தாகாது. ஆகவே, படையெடுத்து வந்து விட்டபின்னர்,