பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 இ. புலவர் கா. கோவிந்தன் படைத் தலைவன் எம்முறை மேற்கொள்ளினும் அம் முறையின் தகுதி தகுதியின்மைகளை ஆராய்வதைவிடுத்து, அவன் ஆணைகளைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியே தீர்தல் வேண்டும். அவரே நல்வீரரும் வல்வீரரும் ஆவர். அரண் கோடல் குறித்து வந்தவன் எத்தகையவனேயாயினும், அவனோடு வந்திருக்கும் அவன் படை வீரர், “அரண் முற்றுகை இத்துணைக் காலம் நீட்டிக்கிறதே!" என்றோ, "அரண் கோடல் குறித்து அரசன் அன்றுவரை எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வி காண்கிறதே!” என்றோ, அரசன் தலைமையை வெறுக்காது. அந்நிலையிலும் அவன் ஆணை ஏற்று அரண் மதிலை அழிப்பதில் ஆர்வம் காட்டுவர் என்றால், உண்மையில் அவர்கள் பாராட்டத் தக்கவரேயாவர். "போர் எனில் புகலும் புனைகழல் மறவர், காடிடைக் கிடந்த நாடு நனிசேய செல்வேர் அல்லேம் என்னார்" (புறம்: 31 என அத்தகைய வீரர் பாராட்டப் பெற்றுள்ளமை காண்க. உழிஞைத் திணையின் விளக்கம் கூறும் "குடையும் வாளும்” என்ற இரண்டாவது சூத்திரத்தில் வந்துள்ள "மதில் மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கம்” என்பது அப்பாராட்டைக் கூறவந்ததே ஆம். ஆக, அரண் புறத்தே முற்றிக் கிடக்கும் பகையரசன் வேட்கையின் விளைவு, அரண் மதில் அழிக்கும் முயற்சியே ஆதலின், பு.வெ. மாலையார் முடிந்த முடிபாக, எயில்தனை அழித்தல்” என்ற துறையினைக் கொண்டார். அரண் பற்றிய போரைத் தொல்காப்பியர் கொண்டது போல், அரணைக் கைப்பற்ற வந்தானை, வென்றாட்டும் வேந்தன் மேற்கொண்ட ஒரு போர் நிகழ்ச்சியாகக் கொள்ளாது, அரணைக் கைப்பற்ற வந்தவன்