பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 19 என்று கூறியுள்ளார் வள்ளுவர். அது மக்களுக்குப் புகழின் பால் உள்ள ஆசையை உணர்ந்து கூறிய கூற்று ஆகும். கல்வி, செல்வம், கொடை என்பன போல்வற்றாலும் புகழ் பெறலாம் என்றாலும், பண்டை மக்கள், தாம் வழிவழி யாகப் பெற்று வந்த மறவுணர்வின் மிகுதியால், போரில் பெறலாகும் வெற்றி தரும் புகழையே விழுமிய புகழாகக் கருதினார்கள். அதனால் அப்புகழ் பெறுவான் வேண்டித் தன் நாட்டிற்கு அணித்தாக உள்ள நாடுகளையே அல்லாமல், தன் நாட்டிற்கு நனிமிகச் சேயவாய்க் கடல் கடந்த நாடுகளையும் வெற்றி கொண்டு வர விரும்பி னார்கள், அக்கால அரசர்கள். ஆநிரை குறித்தோ, அரும் பொருள் குறித்தோ, அழகிய நாடு குறித்தோ, மேற் கொள்ளும் போர்களை வென்று, அப்போர் மேற்கொண்டு வந்தாரின் ஆசைகளை அடக்குவது எவ்வாறு அறம் எனப்பட்டதோ, அவ்வாறே ஆற்றல் காட்டுவது ஒன்றே குறிக்கோளாய்ப் போர் தொடுத்து வருவோனை வென்று ஒட்டுவதும் அறமாம் எனப்பட்டது. ஆகவே, அது செய்ய மேற்கொண்ட போர்கள் சிலவும் பண்டைத் தமிழகத்தில் நிகழ்ந்தன: அத்தகைய போர்களையே, ஆசிரியர் தொல் காப்பியனார், தும்பைப் போர்கள் எனப் பெயர் சூட்டி விளக்கியுள்ளார். இவ்வாறு நிரை கவர மேற்கொள்ள வந்தவன் மேற் கொண்ட போர், அந்நிரை மீட்க வந்தவன் மேற்கொண்ட போர் என, நிரைகாரணமாக நிகழ்ந்த போர்கள் இரண்டு. நாடு கவர வந்தவன் மேற்கொண்டபோர், நாடு காக்க வந்தவன் மேற்கொண்ட போர் என நாடு காரணமாக நிகழ்ந்த போர்கள் இரண்டு. அரணழிக்க முனைந்தான் மேற்கொண்ட போர், அவ்வரணழியாது காக்க முனைந்தான்