பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 207 மேற்கொண்ட போர் ஒன்று, அது உழிஞை, அரண் முற்றுகையைத் தகர்த்து, அதைக் காக்க மேற் கொண்ட போர் மற்றொன்று; அது நொச்சி என இரண்டாகக் கொள்ளும் நிலையில் அரணை அழிக்கும் நிகழ்ச்சி உழிஞையில் கூறப்படுவதே முறையாம். அரணை அழிப்பார், அரணுக்கு உரியரல்லாத பகைவராவரே யல்லாது, அரனுக்கு உரியராகார். ஆகவே அரணழிக்கும் செயல், அரணழிவு கூறுவதாகிய உழிஞையில் இடம் பெறுவது பொருந்துமே யல்லாது அரண் காவல் கூறுவதாகிய நொச்சியில் இடம் பெறுவது பொருந்தாது. ஆகவே எயில்தனை அழித்தல் என்ற துறையினைப் பு:வெ. மாலையார், நொச்சியில் வரிசைப்படுத்தியிருப்பினும், அது உழிஞையில் வரிசைப் படுத்துவதற்கு உரியதே என அறிக. துறைகளை இது போல் இடம் பெயர்த்து வைத்திருப்பது, பு.வெ. மாலையில் இவ்வொரு நிகழ்ச்சியில் மட்டும் காணக்கிடப்பது அன்று; இதுபோல் மேலும் பல உள். உழிஞையாவது அரணை முற்றிக் கொள்ளுதல் என்று பொருள் கூறிய பு.வெ. மாலையார், "முடிமிசை உழிஞை குடி ஒன்னார் கொடிநுடங்கு ஆரெயில் கொளக்கருதின்று” (கொளு; 95), அரண்கோடல் பற்றிய விதிமுறை வகுக்கும் அவ்வுழிஞைப்படலத்துள், "ஆரெயில் உழிஞை" என்ற துறையொன்றைக் கொண்டு, பகைவனுக் குரிய அரணின் பற்றற்கரிய வலிமையைப் பாராட்டுவது அதன் பொருளாம்- வாஅள் மறவர் வணங்காதார், நீ இள் மதிலின் நிலை உரைத்தன்று!” (கொளு; 105) எனக் கூறிப் பின்வரும் வெண்பாவையும் மேற்கொள் செய்யுளாகக் கொண்டுள்ளார்.