பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 209 குரியான், அழிந்தோடி வரும் படையினை அணுகி, ஊக்கமும் உணர்வும் ஊட்டுவன். அரண் காவல் பொறுப்பினைத் தானே ஏற்றுப் போர்க்களம் புகுவன். படைத்தலைவன் இன்மையால் படை அழிந்துவிடுவது இயல்பே. நிலைமக்கள் சாலஉடைத்து எனினும் தானே தலைமக்கள் இல்வழி இல்" (குறள்: 770) என்ற வள்ளுவர் வாக்கினை நினைவு கூர்க. பெருகிவரும் வெள்ளத்தை இடைநின்று தடுத்து நிறுத்தவல்ல அணைபோல், பாய்ந்து வரும் பகைவர் படைவரிசை முன், தான் ஒருவனாகவே புகுந்து போரிட்டு வெற்றி காண்பன். ஒரு பெரிய படையை, மற்றொரு பெரிய படை வெற்றி கொள்வதே உலகியல், ஆனால் வெள்ளம்போல் பரந்த பெரிய படையைப், பகைப் படையைச் சேர்ந்த ஒரு வீரன், தனித்துப் போராடி வெற்றிகொள்வது உண்மையில் வியப்பிற்கு உரியதே ஆம். "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று; இவ்வுலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம். புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க, ஒரு தானாகிப் பொழுது களத்து அடலே" (புறம்:76) என, அச்செயற்கரும் செயலைப் புலவர்களும் வியந்து பாராட்டி யுள்ளமை யுணர்க. அதனால், புறத்தோன் புதுப்புது முறைகளை மேற்கொண்டு போர் புரிந்ததன் பயனாய்த் தோற்று ஓடிவரும் தன் படையைத் தடுத்து நிறுத்தியவாறே தனித்துக் களம்புகுந்த அரணுக்குரியான் செயல் ஆற்றவும் வியத்தற் குரியதாகவே தொல்காப்பியனார், அதைப் புதுமையினும் புதுமை எனப் போற்றிப் புகழ்வாராயினர். அதுவே, "ஒருதான் மண்டிய புதுமை.” இதையே, பு.வெ. மாலையார், "அழிபடை தாங்கல்' எனப் பெயரிட்டுப் பாராட்டி யுள்ளார். ப.த.போ.நெ-14