பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ல் புலவர் கா. கோவிந்தன் புறத்தோன் அணங்கிய பக்கம்: அரணை முற்றியிருப்பவன், இறுதியாக அரண் மதிலை அழிக்கத் தலைப்பட்டு விட்டான் என்பதை அறிந்து கொண்டதும், அரனுக்குரியான், இனியும் வாளா அடங்கிக் கிடப்பதில் பயனில்லை; பகைவன்முயற்சியை முறியடிக்க முனைதல் வேண்டும் எனத் துணிவன்; அவ்வாறு துணிந்தவன், அப்புறப் பகைவனை முறி யடிக்கும் போரினை அரணுக்குள்ளேயே மேற்கொள்வது இயலாது. பகைவன் முறையே காவற்காட்டை அழித்து, அகழியைத் துார்த்துப் புறநகரை அடைந்து ஆங்கிருந்த வாறே அரண்மதிலை அழிக்க முனைந்துள்ளான் ஆதலின், அவன் படையை அப்புற நகரிலேயே எதிர்த்துப் போராடுதல் வேண்டும். அதனால், அரனுக்குரியான் அரண்வாயிலைத் திறந்து கொண்டு புறநகர் வந்து ஆங்கு அரண் மதில் அழிப்பதில் ஈடுபட்டிருக்கும் அப்பகைப் படையைச் சாடுவான். இவ்வாறு திடுமென வந்து தாக்கிய அவன் தாக்குதலைத் தாங்க மாட்டாது பகைப்படை, அரண் மதில் அழிப்பதைக் கைவிடுவதோடு, அப்புறநகர் விட்டே ஓடிவிடும். ஆனால், அப்போரில் அரணுக் குரியான் படை வரிசையிலும் சிலர் உயிரிழந்து போதல் உண்டு. உயிரிழந்தார் எனினும் அரண்மதிலுக்கு வர இருந்த அழிவைக் காத்த பெருமையில் அவர்க்கும் பங்குண்டா தலின், வென்றாரைப் போலவே அவரும் பாராட்டுக்குரிய வராவர். அப்பாராட்டைக் கூறுவதே "ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன்பாகி' என்ற தொடரால் பெயர் பெறும் "பாசிமறன்" என்ற துறை. பு:வெ. மாலையில், "மறனுடைப் பாசி" எனவரும் துறை இதுவே. "மறப்படை மறவேந்தர் துறக்கத்துச் செலவுரைத்தன்று.”