பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ళీ புலவர் கா. கோவிந்தன் ஆனால், அரணைக் கைக்கொண்டால் அடையலாகும் பொருட் செல்வமோ அளவிறந்தது என்ற நினைவால், அரணை வளைத்துக் கொண்ட பகைவன் காவற் காட்டைக் கடந்தாயிற்று; அகழியைத் துார்த்தாயிற்று; புறநகர்க் காவற்படையை அழித்தாயிற்று, அரண்மதிலைக் கடக்கவேண்டுவது ஒன்றே எஞ்சியுள்ளது; அது முடிந்தால் அரண் நமதே என்ற நினைவால் செருக்குண்டிருக்கும் சமயம், அரணுக்குரியானால் திடுமெனத் தாக்குண்டமை யால் பேரழிவிற்கு உள்ளாகிப் புறங்காட்டி ஒட வேண்டியதாயிற்று. இவ்வாறு அரணை வளைத்துக் கொண்டு புறத்தே கிடந்த பகைவனுக்கு நேர்ந்த பெருங்கேட்டையே முடிந்த முடிபாகப் ‘புறத்தோன் அணங்கிய பக்கம்” என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். உடன்றோர் வருபகை பேணார் ஆர்எயில்: தன் அரண்மீது ஆசைகொண்டு, பெரும்படையோடு வந்து வளைத்துக்கொண்டதன் விளைவால் அரணகத்து மக்கள் பட்ட அல்லலும், அரணுக்கு நேர்ந்த அழிவும் அரணுக்குரியானுக்கு ஆற்றொணாச் சினம் அளித்தது. பகைவனை வென்று துரத்தியதோடு அவன் உள்ளம் அமைதி யுற்றிலது. படை கொண்டு வந்த பகைவன் அடங்கா ஆசையின் விளைவினை எண்ணி எண்ணி அழுதல் வேண்டும்; அவனைக் காண்பார் அனைவரும் அவனை எள்ளி நகையாடி இகழ்தல் வேண்டும் என்றும் எண்ணிற்று அவன் உள்ளம். அதனால் அரசுரிமையின் சின்னமாய், அவன் தலையில் அணிந்திருந்த மணி மகுடத்தைக் கைக்கொண்டு அழித்து,அப்பொன் கொண்டு கழல் பண்ணிக் காலில் அணிந்து கொண்டான். அதன்