பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 213 பின்னரே அவன் சினம் தணிந்தது. பகைவன் அடைந்த தோல்வியின் இக்கொடுமையினையும், தான் பெற்ற வெற்றியின் பெருமையினையும் ஒரு சேர விளக்குவதே, "இகல் மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலம்" என்ற துறை. "வென்றி பெற வந்த வேந்தை இகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக் கண்டு. தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண் விருந்து செய்தான் பெருந்தகை என்று ஆர்த்தார் பிறர்." பகைவன் முடிப் பொன் அழித்துப் பண்ணிய கழல் புனைந்து வெற்றி விழாக் கொண்டாடி மகிழ்ந்த அவன், அவ்வெற்றியைத் தேடித்தந்த வாள் வீரரை மறந்தானல்லன். அவர் துணையின்றி அரணைக் காத்தல் இயலாது என்பதை உணர்ந்திருந்தமையால், அவர்க்குச் சிறப்பும் பெருமையும் அளிக்க விரும்பி அரண் காவல் போரில் பங்கு கொண்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்துப் பாராட்டுவதினும், அவர் கையிற் கிடந்த அருந்துணை புரிந்த வீர வாளுக்குச் சிறப்பளிப்பதே சாலவும் பொருந்தும் என எண்ணியமையால், வீரவாளைத் துயநீராட்டிப் பொட்டிட்டுப் பூவணிந்து வீர உலாவந்து விழாக் கொண்டாடினான். இவ்வாறு வீரவாளுக்கு விழா எடுப்பதன் முகத்தான், வீரர்க்கு விழாக் கொண்டாடுவதே "வென்ற வாளின் மண்' என்ற வாள் மண்ணு மங்கலத் துறை. "தீர்த்த நீர் பூவொடு பெய்து திசைவிளங்கக், கூர்த்த வாள்மண்ணிக், கொடித்தேரான் - பேர்த்தும் இடியார்பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான், டையார் அறையப் பகம்." - 니 அறையப் புகழ - பு:வெ. மாலை:121.