பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ళ புலவர் கா. கோவிந்தன் செய்யவே, அரணின் பற்றற்கருமை பாராட்டும் "ஆரெயில் உழிஞை'த் துறையினை, உழிஞைத்திணையின் இறுதித் துறையாக அமைத்துள்ளார் ஆசிரியர். "உழிஞை தானே மருதத்துப் புறனே; முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் என்ப" "அதுவே தானும் இருநால் வகைத்தே." "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும், உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும், தொல் எயிற்கு இவர்தலும், தோலது பெருக்கமும், அகத்தோன் செல்வமும், அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும், திறற்பட ஒருதான் மண்டிய குறுமையும், உடன்றோர் வருபகை பேனார் ஆரெயில் உளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே." "குடையும் வாளும் நாள்கோள் அன்றி மடையமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும், அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும், நீர்ச்செரு வீழ்ந்த பாசியும், அதா அன்று, ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும், மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும், இகல்மதில் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும், வென்ற வாளின் மண்ணொடு ஒன்றத் தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறை என மொழிப" -தொல்: புறம்: 66; 67; 68; 69