பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இச் 219 அடக்குதல் வேண்டும் எனத் துணிந்து, அவனை வென்று அடக்க, அவனோடு போர் தொடுத்துப் போவதும் உண்டு. அவ்வாறு மேற்கொள்ளும், அவ்வாணவ அழிப்புப் போருக்குத் தமிழர்கள் தும்பைப் போர் எனும் பெயர் சூட்டிப் பாராட்டியுள்ளார்கள். பொருளாசை தூண்டப் பிற நாட்டின் ஆனிரை கவர்தல் காரணமாக மேற் கொள்ளும் போரும், மண்ணாசை தூண்டப், பிறநாட்டின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கோடல் காரணமாக மேற்கொள்ளும் போரும், (அவ்விரு ஆசைகளையும் நிறைவேற வொட்டாது இடை நின்று தடுக்கும் அரணழிவு குறித்து மேற்கொள்ளும் போரும்) எவ்வாறு அறனொடு படா அழிவுப் போர்கள் ஆகுமோ, அவை போலவே, தன் ஆற்றலை அகில உலகமும் அறிந்து பாராட்ட வேண்டும் என்ற ஆணவம் காரணமாக மேற்கொள்ளும் போரும் அழிவுப் போரே ஆகும். அது போலவே முற்கூறிய மூவகை அழிவுப் போர்களுக்கும் மாறாகப், பொருளாசை காரணமாக வந்தானை அழிக்க மேற்கொள்ளும் போரும், மண்ணாசை காரணமாக வந்தானை அழிக்க மேற்கொள்ளும் போரும், அரண் அழிக்க வந்தானை அழிக்க மேற்கொள்ளும் போரும் பாராட்ட்த்தக்க அறப்போர்களாதல் போலவே, ஆற்றல் காட்ட வந்தானை அழிக்க மேற்கொள்ளும் போரும் பாராட்டத்தக்க அறப் போராகும். பண்டைத் தமிழ் மக்கள் மேற்கொண்டு நடாத்திய போர்களின் இவ்வுண்மை நிலையை உள்ளவாறு உணர்ந்தவர் தொல்காப்பியராதலின், தும்பைப் போர் எனப்படுவது, மைந்து பொருளாகப் போர் தொடுத்து வந்த