பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ஜ் புலவர் கா. கோவிந்தன் போரிடுவதில்லை. ஆகவே ஆனிரை காரணமாகப் போராடத் துணிந்தவர்கள், அதற்காம் காரணம் எழுந்த இடமாகிய குறிஞ்சி நிலம், தம் இரு படைகளும் நின்று போரிடற்கியலா மலை நாடாக உளது; ஆகவே, தம் படைகள், அவ்விடம் விட்டகன்று மணல் பரந்த கடற் கரைக்கண் சென்று போரிடுக, என்று ஆணை பிறப்பிப்பது இல்லை. மாறாக, அப்போர், அம்மலையகத்து மண்ணி லேயே நடைபெறும். அது போலவே, நாட்டெல்லை காரணமாக நிகழும் போர் நாட்டெல்லைக்கு அப்பாற் பட்ட நிலத்தில் நிகழாது, நாட்டெல்லையாக விளங்கும் காட்டகத்திலேயே நிகழும். அது போலவே அரண் காரணமாக நிகழும் போர் அது அமைந்திருக்கும் இடத்திற்கு அப்பாற்பட்ட நிலத்தில் நிகழாது. அது அமைந்திருக்கும் இடமாம் வயல் நிலத்திலேயே நிகழும். இரு பெரும் வேந்தர்கள் போரிடற்கேற்ற இடம், காடும் மலையும் கழனியும் ஆகாது; களரும் மணலும் பரந்த கடல் நிலமே ஏற்புடையது எனக் கூறும் அவ்வாசிரியர்கள் இருவருமே, ஆனிரை குறித்த போர் விளக்கம் கூறும்போது "வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரை கோடல் குறிஞ்சிக்குரிய மலை சார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிற நாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒருபுடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று என்க" தொல், பொருள் இளம்பூரணம். 59) என்றும், நாட்டெல்லை பற்றிய போர் விளக்கத்தின் போது, "அதற்கு (வஞ்சிக்கு) இது (முல்லை) புறனாகியவாறு என்னையெனின், "மாயோன்மேய காடுறை யுலகமும்,' கார்காலமும் முல்லைக்கு முதற் பொருளாதலானும்,