பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி ன் 223 பகைவயிற் சேறலாகிய வஞ்சிக்கு நிழலும் நீரும் உள்ள காலம் வேண்டுதலானும் பருமரக் காடாகிய மலைசார்ந்த இடம் ஆகாமையானும், அதற்கு இது சிறந்தது என்க” (தொ. பொ. இளம்பூரணம்.64) என்றும், "முதல் எனப்பட்ட காடுறையுலகமும், கார் காலமும் அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும் அரசன் பாசறைக் கண் தலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்து மனைவயின் இருத்தலும் ஆகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பமும் நீக்கத் தன்பெயல் பெய்து, நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக், களிறு முதலியவற்றோடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும், அம்முதல் கரு உரியும் வந்தனவாம்’ (தொ.பொ. நச்சினார்க்கினியர்.61) என்றும், அரண் பற்றிய போர் விளக்கத்தின்போது, "வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர் செய்தல் ஆற்றாது உடைந்து, மாற்று வேந்தன் அரண் வலியாகப் போர் செய்யுமாகலானும், அவர் நாட்டகத்து ஆகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற் பொழுது காலமாகலானும், அதற்கு (மருதத்திற்கு இது (உழிஞை) புறனாயிற்று” (தொ.பொ. இளம்பூரணம்.57) என்றும், "இரு பெரு வேந்தர் தம்முள் மாறு கொண்ட வழி எதிர் செலற் காற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்து இருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்தவனும், புறப்பட விரும்புதலானும், மருதம் போல் இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானும், சிறு பொழுதினும் விடியற்காலமே போர் செய்தற்குக்