பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 21 இயலை, அக்காலத் தமிழகத்தின் நிலையை அகத்துட் கொண்டு ஊன்றி நோக்குவார்க்கு, ஆசிரியர் கூறுவன எல்லாம், நின்று தாக்கிய ஆக்கப் போர்களே அல்லது, சென்று தாக்கிய அழிவுப் போர்கள் அன்று என்பது தெற்றெனப் புலனாகும். இக்கருத்தை ஆராய்ந்து நிலைநாட்டுவதோடு அந்நான்கு போர்களின் ஒவ்வொரு நிலையினையும் விளக்கும் துறைகளின் அமைதியினை, அத்திணைகளோடு பொருத்திக் காண்பிப்பதே இக் கட்டுரையின் நோக்கமாம்.