பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 శ புலவர் கா. கோவிந்தன் தொடுத்துப் போவதும், அவ்வாறு போவோனை, அந்நாட்டுக்கு உரியான் வென்று துரத்துவதும் தும்பைத் திணையெனக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நிலையான அரசு அமையாதாகவே, தமிழர் முறையான போர் நெறிகளைக் கல்லாமையினால் சிறந்த வீரர்கள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லாது போகவே, தமிழகம் ஆற்றல் குறைந்து விளங்க, அக்காலத்தில், தம் ஆற்றல் காட்டப் பிற நாட்டவர் தமிழகத்தின் மீது போர் தொடுத்து வருவதும், தமிழர்கள் அவர்களை வென்று ஒட்டுவதும் இயல்பாக இருந்தன. கங்கைக்கரைக்கண் பேரரசு அமைத்து ஆண்டவராகிய ஆரியரும் மோரியரும் தமிழகத்தின் மீது போர்தொடுத்து வந்தாராக, அவர்களைத் தமிழ் வேந்தர்களும் வீரர்களும் வென்று துரத்திய வரலாற்றுச் செய்திகள் செந்தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே விளங்க உரைக்கப்பட்டுள்ளன. அவ்வட இனத்தவருள் ஒருவராகிய ஆரியர், சோழர் ஆட்சிக்கு உட்பட்டதும், விற்படை வீரர்களால் காக்கப் பெற்றிருந்தது மான வல்லம் வரையும் வந்து விட்டனர் என்றும், ஆயினும், அவ்வல்லப் பெருநகரைச் சுற்றி அரணாக வளர்ந்திருந்த காவற் காட்டிலேயே, அப்படை அழிந்து ஆற்றல் இழந்து போகுமாறு அடித்துத் துரத்தப்பட்டது என்றும் ஒரு செய்தி கூறுகிறது. “சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக" அதைப் போலவே, தம் நெடிய பெரிய தேர்ப்படை செல்லாதபடி இடை நின்று தடுத்த பெரு மலைகளெல்லாம் உடைத்து வழி செய்து கொண்டு வந்த மோரியர், மோகூர் அரணையும் அணுகி விட்டனர் என்றும், அவர்களைக் கோசர் படைத் தலைவனும், அம்மோகூர்க் குரியோனுமாகிய பழையன்