பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 இ. புலவர் கா. கோவிந்தன் பாணன் செயலும், ஆணவம் கொண்டு போரிட வருவானை வென்றடக்கும் தும்பைப் போர் நிகழ்ச்சியே யாம், "பாணன், மல்லடு மார்பின் வலியுற வருந்தி எதிர்தலைக் கொண்ட ஆரியப்பொருநன் நிறைத்திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்து திறன் வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க் கணையன் நாணி யாங்கு" -அகம்:386 இவ்வாறு, தம் ஆற்றல் காட்ட வருவாரை வென்று ஒட்டும் நிலை நிலவிய காலத்தே எழுந்தது தொல்காப்பியம் ஆதலின், அது வந்தானை வென்று ஒட்டுவதேதும்பையாம் என்கிறது. காலம் செல்லச் செல்லத் தமிழகத்து வீரவாழ்வில் மாற்றம் இடம் பெற்றுவிட்டது. ஆன்றோரும் சான்றோரும் வரர் வழிபாட்டினையே தம் பாடற்பொருளாகக் கொண்டு பாடவும், மன்னர்களும், மாநிதிச் செல்வர்களும், வீரச் செயல் புரிந்து வெற்றி கண்டவர்க்கே நன்செய் புன்செய் களையும், நவமணிப் பொன்னணிகளையும் வாரிவாரி வழங்கவும், வீர வாழ்வல்லது வேறு வாழ்வறியா மறக் குடிகள் தமிழகத்து ஊர்தோறும் தலையெடுக்கத் தலைப் பட்டு விட்டன. அந்நிலை பிறந்துவிடவே, தம் ஆற்றல் காட்டத் தமிழ் நாட்டிற்குப் பிற நாட்டவர் வருவதும், அவரைத் தமிழர் வென்று ஒட்டுவதுமான நிகழ்ச்சி தமிழகத்தில் இடம் பெறவில்லை; மாறாகத் தம் ஆற்றலை நிலை நாட்டத் தமிழகத்து மன்னர்களும் மாவீரர்களும் பிற நாட்டின்மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்ட நிகழ்ச்சிகளே இடம் பெறலாயின. x