பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 231 சேரனும், பாண்டியனும், ஒளியரும், அருவாளரும் பொதுவரும், வேளிரும் போலும் தமிழகத்து மன்னர் குலமெல்லாம் அடி பணிந்து விட்டாராகத் தன் பேராண் மையைக் காட்டத், தமிழகத்து மண்ணில் வாய்ப்பில்லாது போகவே, தன் போர் வேட்கையினைத் தணித்துக் கொள்வது ஒன்றே குறிக்கோளாகச் சென்ற வடநாட்டிலும், அவந்தி அரசன் தோரண வாயில் தந்தும், மகத மன்னன் பட்டி மண்டபம் கட்டித் தந்தும், வச்சிரத்து வேந்தன், கொற்றப் பந்தர் கொடுத்தும் பணிந்து விட்டமையால், ஆண்டும் போர் வேட்கை தணியாது போகவே, மேலும் வடக்கே நோக்கிச் செல்ல, இமயம் இடைநின்று தடுக்கக் களித்து, அதன் மீது தன் புலிக் கொடி பொறித்துப் புகழ்மாலை கொண்டு தமிழகம் மீண்ட திருமாவளவனின் வடநாட்டுப் படையெடுப்பினை ஈண்டு நினைவு கூர்க. "இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச் செருவெம் காதலின் திருமா வளவன் வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் . நாளொடு பெயர்த்து நண்ணார்ப்பெறுக, இம் மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள்' எனப் புண்ணியதிசை முகம் போகிய அந்நாள், அசைவில் ஊக்கத்து நசை பிறக்கு ஒழியப் பகை விலக்கியது இப்பயங் கெழுமலை யென இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் . கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் . பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்