பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 : புலவர் கா. கோவிந்தன் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்." - -சிலம்பு : 5; 89-104 தமிழகத்து வீரவாழ்வில் இத்தகைய நிலைமாற்றம் இடம் பெற்று விட்டமையால், பைந்தமிழ் இலக்கியங்களில், தம் ஆற்றல் காட்டத், தமிழகத்து மாவீரர்கள் பிற நாடுகள் மீது போர் தொடுத்துப் போன நிகழ்ச்சிகளுக்கல்லது, தம் ஆற்றல் காட்டப் பிறநாட்டவர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து வந்ததற்கான நிகழ்ச்சிகளுக்குச் சான்றுகள் இல்லாயின. வேங்கடம் குமரிகட்கு இடைப்பட்ட தமிழ்நாடு முழுவதும், சோழர் பேரரசே நடைபெறும் பெருநிலை பெற்றும் அமையாது, கங்கை வரையுள்ள நாடுகளை யெல்லாம் வென்று கங்கை கொண்ட சோழன் என்றும், கடல் கடந்து சென்று ஈழத்தையும் கடாரத்தையும் வென்று ஈழமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்றும் புகழ்மிகு பெயர் கொண்ட இராஜேந்திர சோழன் வரலாறும் ஈண்டு நினைவில் இருத்தற்கு உரித்தாகும். பொன், பொருள், மண், மாநிலம் என்ற பிற ஆசைகளை அடிப்படையாகக் கொண்டு ஆனிரை, அண்டை நாட்டு எல்லை, அரண் காரணமாக எழும் போர்கள் பற்றிய விளக்கங்களைக் கூறியது போலவே, புகழாசையை அடிப்படையாகக் கொண்டு, ஆற்றல் காட்டல் காரணமாக எழும் போர் பற்றிய விளக்கம் கூறும் ஈண்டும், ஆற்றல் காட்ட வருவோன் செயல் பழிக்கத் தக்கதேயன்றிப் பாராட்டற்கு உரியதன்று; மாறாக அவ்வாறு ஆற்றல் காட்ட அமர் தொடுத்து வருவானை வென்று அடக்க அவன் மீது போர் தொடுத்துப் போவதே