பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 233 பாராட்டற்கு உரியது என்ற உள்ளுணர்வு உடையராகி, தும்பையாவது, மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலை அழிக்கும் சிறப்புடையதாகும் என்று கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனார். "தும்பை தானே நெய்தலது புறனே, மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப" தொல்காப்பியர் காலநிலை அதுவாகவே, அவர் கூற்று அக்காலத்திற்கு ஏற்புடையதாய் அமைந்தது. ஆனால், காலம் மாறக் கருத்தும் மாறுவதுபோல், தொல்காப்பியர் காலத்தில் பழித்தற்குரியதாயிருந்த மைந்து பொருளாகப் போர் தொடுத்துப் போவது, பிற்காலத்தில் பாராட்டற்குரியதாகி விடவே, ஐயன் ஆரிதனார் தும்பையாவது, மறங்காரணமாகப் போர் தொடுத்துப் போவதாம் என, அதையே பாராட்டி, அதற்கே இலக்கணம் கூற முன் வந்துள்ளார். தும்பையாவது, “செங்களத்து மறங்கருதிப் பைந்தும்பை தலைமலைந்தன்று" என்ற அவர் கொளு விளக்கத்தினைக் காண்க. மறங்கருதித், தும்பை சூடுவதே பாராட்டற்குரியது என்பதே அவர் கருத்தாயின், அவ்வாறு வருவோன் மறத்தைக் கெடுத்து அடக்க, அவனோடு போரிடச் செல்வோன் செயல் பழித்தற்குரியது என்பது அவர் கருத்தாமோ என்றால், ஆகாது என்க. மறங்கருதி மாறுபடுவானை வென்று அடக்குவதும் மறங்காட்டுவதே ஆகும்; ஆதலின், அதுவும் பாராட்டற்குரியது என்பதே அவர் கருத்தாகும். ஆக, அவர், மறங்கருதி வருவதும், அவ்வாறு வருவானை வென்றடக்கச் செல்வதும் ஆகிய இரண்டுமே மறங்காரணமான போர்களாம், ஆகவே,