பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இ. புலவர் கா. கோவிந்தன் இரண்டுமே பாராட்டற்குரியவாம் என்று கருதினார். அதனால், மறங்கருதித் தும்பை மலைதல் எனப் பொதுவாகக் கூறி அமைந்தார். மறங்கருதிப் போர்மேற் செல்லும் மறவர், தும்பை மலர் மலைவது ஏன்? மறங்கருதிய போர், புகழாசையினை அடிப்படையாகக் கொண்டது. புகழுக்கு வெண்மை நிறம் கற்பிப்பர் அறிஞர். அதனால், தூய வெண்ணிறம் உடைய தானதும்பை மலர், புகழ் காரணமாகப் போரிடப்போகும் வீரர்கள் அணியும் பூவாதல் பொருத்தமே என்க. மேலும் தும்பைச் செடி, வன்னிலத்துச் செடியாகும், மறங்கருதிய போர் வேட்கை, உரம் மிக்க உள்ளத்தில் மட்டுமே உருவாகும். தும்பைச் செடி பிணி போக்கும் மருந்துமாம். தும்பைப் போர், புகழாசை கொண்டு போரிட வருவானின், அவ்வாசைப் பிணியை அழிக்க மேற்கொண்ட போராகும். மேலும், தும்பை மலர் இட்டுக் காய்ச்சிய எண்ணெய் தேய்த்து முழுக, நீர்க்கோப்பு நோய் நீங்கும் என்ப; தும்பை மலர் அணிந்து செல்லும் வீரர்களால், மறங்கருதி வந்த மாற்றானின் ஆசை அழிந்து இல்லாகும்; கூறிய இவ் வொருமைப் பாடுகளினாலும், தும்பை, மறங்காரணமாகப் போரிடப் போகும் வீரர்கள் அணிவதற்குச் சாலப் பொருந்துவதாகும். - உயிரினங்களுள், பிற உயிர்களை உண்டு உயிர்வாழும் உயிரினங்களும், பிற உயிர்களுக்கு உணவாகிப் பயன்படவே உயிர் வாழும் உயிரினங்களும் ஆகிய இரண்டுமே, ஒன்றை யொன்று கண்டு கொள்ளாவாறு கரந்து வாழவே விரும்புகின்றன. தாம் இருப்பதை அறிந்துகொண்டால், பிற உயிரினங்கள் ஓடி ஒளிந்து கொள்ளுமே என்ற உணர்வால் - கொல்விலங்குகளும், தாம் இருப்பது கொல்விலங்கு