பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ல் புலவர் கா. கோவிந்தன் ஆண்டெல்லாம், ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாகக் கொண்ட அவர்களே, மைந்து பொருளாக நிகழும் இப்போர் நிலையினை மட்டும் இரு பிரிவாகக் கொள்ள மாட்டாது, தொல்காப்பியர் கொண்டது போலவே, ஒரு நிகழ்ச்சியாகவே கொண்டு, தும்பை எனும் ஒரு பெயரே சூட்ட வேண்டிய நிலையிலேயே நிற்பதால் உறுதியாவது உணர்க. வெட்சிப் போர், மாற்றார் கவர்ந்து கொண்ட தன் ஆனிரைச் செல்வத்தை மீட்டல் காரணமாக நிகழும் போராதலின், அந்நிரை கருதி வருவோனும், அது மீட்டல் கருதி மேற்செல்வோனும், முறையே, அதைக் கவர்தலும் மீட்டலும் முடிந்ததும், தம் போர் நிகழ்ச்சிகளைக் கைவிட்டு விடுவர். அது போலவே வஞ்சிப் போர், மாற்றார் கைப்பற்றிக் கொண்ட தன் மண்ணிலிருந்து அம்மாற்றாரை வென்று ஒட்டி, அம்மண் மீது தனக்குள்ள உரிமையைக் காத்தல் காரணமாக நிகழும் போராதலின், அம் மண் கருதி வ்ருவோனும் அது மீட்டல் கருதி மேற் செல்வோனும், முறையே, அம்மண்ணைக் கைப்பற்றலும் மீட்டலும் முடிந்ததும், போர் நிகழ்ச்சிகளைக் கைவிட்டு விடுவர். அது ப்ோலவே, உழிஞைப் போர், தன் அரணை முற்றி வளைத்துக் கொண்டிருக்கும் பகைப் படையை வென்று ஒட்டித் தன் அரணைக் காத்தல் காரணமாக நிகழும் போராதலின், அவ்வரண் கருதி வரும் பகைவனும், அது காத்தல் கருதிப் புறம் போந்து போரிடும் அரணுக் குரியானும், முறையே, அரண் காவல் அழிந்து அது தனதுடைமையாதலும், வந்து வளைந்திருந்த படை அழிந்து அகன்று போதலும் முடிந்ததும், தம் போர் நிகழ்ச்சிகளைக் கைவிட்டு விடுவர். . .