பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 尊 புலவர் கா. கோவிந்தன் ஆகிய அந் நிகழ்ச்சிகளெல்லாம் தும்பைத் திணைக்குச் Aறப்பளிக்கும் நிகழ்ச்சிகளாம் எனக் கூறியுள்ளார். "கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா அரு நிலை வகையோடு இருபால் பட்ட ஒரு சிறப்பின்றே." -தொ. பொ. புறம் 16, தும்பைத் திணையின் பொது இயல்பினைக் கண்டோம். இனி, அத்தினை துறைகளின் இயல்புகளை நோக்குவோமாக. தானை நிலை: யானை நிலை: குதிரை நிலை: மாநிதி, மண், மதில் இவை குறித்த போர் நிகழ்ச்சி களில், மன்னர்களின் எண்ணமெல்லாம், அவற்றைக் கைக்கோடல் ஒன்றிலேயே குறியாக நிற்குமாதலின், போர் தொடங்குவதற்கு முன்பாகவோ, அல்லது போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயோ அவை கிட்டி விடுமாயின், மன்னர்கள் மேற்கொண்டு போரிடார். ஆனால், தம் ஆற்றலை நிலைநாட்ட மேற்கொள்ளும் ஆணவப் போரில் மன்னர்கள் அம்முறையை மேற் கொள்ளார். மாறாக, மாற்றானும் அவன் நாற்படையும் அறவே மடிந்து மண்ணாகும் வரையும், போரைக் கைவிடாதே மேற்கொள்வர். அதனால், முன்னைய மூவகைப் போரினும் இப்போர் நிகழ்ச்சியில், நாற்படை களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆகவே, அவற்றைப் பாராட்டும் துறைகள், இத்திணையின் முதற்கண் இடம் பெற்றுள்ளன. தன் ஆண்மை ஆற்றல்களை அண்டை அரசுக ளெல்லாம் அறிந்து அஞ்சி அடிபணிய வேண்டும் என