பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 245 விரும்பும் வேந்தனோ, அல்லது வீரனோ, அந்நிலையைப் போராடியே பெறுதல் வேண்டும் என்பதில்லை. அந்நிலை, அவர்தம் உண்மை வீரத்தை உணர்த்துவதாகாது. யாரேனும் ஒரு வேந்தன் அல்லது வீரன் அத்தகைய எண்ணங்கொண்டு விட்டான் என்பதை அவன் அண்டை நாட்டு அரசுகள் அறிந்த அளவே, அவன் தம்மீது படை யெடுத்து வாரா முன்பே சென்று அடிபணிதல் வேண்டும். அதுவே, அவ்வீரனின் உண்மை வீரத்தை உணர்த்து வதாகும். பகைவரின் படையும் படைக்கலமும் பாழ்படுமாறு பெரும் போர் செய்து பெறும் வெற்றியை எவர் வேண்டுமாயினும் எளிதில் பெற்றுவிடுதல் இயலும். ஆனால், பாம்புறையும் புற்றையும் கொல்லேறு திரியும் ஊர் மன்றத்தையும் மக்கள் அணுகவும் அஞ்சுவது போல், பெரும் வீரன் வாழும் பாசறை இது, இப் பாசறைக்கண் அப்பெரு வீரன் உளன் என்பது அறிந்தே அஞ்சி அடிபணியப் பெறும் வெற்றியே, உண்மையில் பெரு வெற்றியாகும் என, உண்மை வீரத்துக்கு உரை வகுக்கும் மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் பாட்டைக் காண்க. "இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; நல் அரா உறையும் புற்றம் போலவும், கொல்லேறு திரிதரும் மன்றம் போலவும் மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை உளன் எனவெரூஉம் ஒரொளி வலன் உயர் நெடுவேல் ೯ನಲ್ಲ கண்ணதுவே." -புறம். 309. ஒரு வீரனுக்கு, அத்தகைய பெரு வெற்றியைப் பெற்றுத் தருவது, அவன் நாற்படை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு