பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஒ. புலவர் கா. கோவிந்தன் போராடத் துணிந்த வேந்தர்களுக்கு அத்துணிவை அளித்தது, இருபுறமும் தொங்கி, மாறி மாறி ஒலிக்கும் மணிகளையும், பரந்த அடிகளையும், வலிய பெரிய கால்களையும், மலையென மருளும் உயர்ச்சியினையும் உடைய யானைப் படைகளையும், தேர்ப் படைகளையும், குதிரைப் படைகளையும், படைக்கலத் தொழில் பயின்ற பெரு வீரர்களையும் கொண்ட நாற்படையினை நனிமிகப் பெற்றுள்ளோம் நாம், என்ற செருக்கே யாதல் அறிக. "படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச் சிறு சொல் சொல்லிய சினங்கெழு வேந்தர்." -புறம்: 72. ஆக, ஆற்றல் மிகு மறவரின் ஆற்றலை மேலும் ஆற்றல் உடையதாக்குவதும், அவர் ஆற்றலைப் பிறர் கண்டு அஞ்சப் பண்ணுவதும், அம் மறவரின் நாற்படையே ஆதலின், தம் ஆற்றலை நிலை நாட்ட முனைவாரின் செயல் முறைகளைக் கூறுவதன் முன்னர், அவர் தம் நாற்படைப் பெருமை பாராட்டப் பெறுவதே முறையாதலின், "தானை, யானை, கதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்” என அவற்றின் நிலைகளைக் கூறினார் ஆசிரியர் தொல் காப்பியனார். பு:வெ. மாலையார், இவற்றிற்கே, முறையே தானை மறம், யானை மறம், குதிரை மறம் எனப் பெயர் சூட்டி வாழ்த்தியுள்ளார். தானை, யானை, குதிரைப் படைகளோடு, தேர்ப் படையும் இணைத்தே எண்ணப்படுமாதலின், பு.வெ. ார், தேர் மறம் என்ற துறையையும் கொண்