பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 23 திரட்டு: 752) என்னும் செய்தியும் வெட்சி மலர், செந்நிறம் உடைத்து என்பதை உறுதி செய்தல் காண்க: நிறங்கள் ஏழு என்றாலும், எல்லா நிறங்களும் எல்லாராலும் விரும்பப் பெறுவது இல்லை. சிலர்க்குச் சில நிறங்களிடத்து மட்டுமே விழைவுண்டாம். அவ்விழைவு தானும், அவரவர் தம் மன இயல்புகளுக் கேற்பவே அமையும். துறவி காவியாடை விரும்புவன். செந்நிற ஆடை யிடத்து அவன் சிந்தை செல்வதில்லை. வெள்ளாடை விழுமிய எண்ணங்கள் வாய்க்கப் பெற்றவர் விரும்பும் ஆடையாம். பன்னிற ஆடைபால் பரிவுண்டாதல் பண்பின் நீங்கிய பழி நிறை வாழ்வினர்க்கு மட்டுமே இயல்பாம். இது யாவரும் அறிந்த உண்மை. ஆகவே, ஒருவர் விரும்பும் நிறங்களைக் கொண்டே அவர்தம் இயல்பினை அறிந்து கோடல் கூடும் என அறிக. இந்நெறியே நோக்கின், செந்நிறம் சினம் மிக்காரும் செருவேட்கையுடையாரும் விரும்புவது என்ப. "கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (தொல், சொல். 372) எனத் தொல்காப்பியனார் கூறுவதும் காண்க வெட்சி மலர் செந்நிறம் உடையது என்ப. ஆகவே, அதை அணிவார் சினமும் செருவேட்கையும் உடைய ராதல் வேண்டும். வெட்சி மலர் அணிந்து செல்லும் வெட்சி வீரர், அதற்கு ஏற்பச் சினமும் செரு வேட்கையும் இயல் பாகவே வாய்க்கப் பெற்றவராவர் என்பது அவ்வெட்சியார் யாவர் என்பதை அறிவார்க்கு நன்கு புலனாகும். 1. Vetchi: The English name for Vicle Sativa, also known as Tare, a leguminous annual herb, with trailing or climbing stems, compound leaves with five or six pairs of leaflets. Reddish-purple flowers born singly or in pairs, the leafet-axis, and a silky pot containing four to ten smoothy seeds. o - - Encyclopaedia Britanica Vol.23, Page 113.