பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 尊 புலவர் கா. கோவிந்தன் செயல் முறையால் செய்து காட்டும் நல்லாண்மையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒப்பற்ற படைத்தலைவனைப் பெற்றிருப்பது இன்றியமையாதது ஆதலின், அது கூறும் இத்துறை ஈண்டு வைக்கப்பட்டுளது. யானையின் கால்களைத் தளைக்கும் சங்கிலித் தொடர் போல், போராடி மாண்ட வீரர்களின் உடலினின்றும் சரிந்து வீழ்ந்த குடர்கள் தளைத்து, தன் கால்களை ஒரு பக்கம் பிணிக்க, 'இவனை ஆங்குப் போகவிடன்மின்!” எனக் கூறியவாறே, பகைவீரர் பலரும் ஒருபுறம் வளைத்துக் கொள்ளவும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், வடித்துக் கூராக்கிய வாளைக் கையில் கொண்டு, கன்றைக் காக்க விரையும் கறவைபோல், களத்தின் முன்னிடத்தே தனித்து நின்று போராடும் தன் தோழனுக்குத் ജ്ഞങ്ങ போகும் வீரன் செயல் இத்துறைக்கு நல்ல எடுத்துக்காட்டாம். "வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, ஒம்புமின் ஒம்புமின் இவண் என ஒம்பாது தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக் கன்றமர் கறவைமான முன்சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே.” -புறம் 275 பெரு மழைத் தாரையின் சிறுதளிதானும் மேனியில் படாவாறு காக்கும் குடைபோல், பகைவர் ஏவும் கணைகளில் ஒன்று தானும் தன் தலைவன் மீது படாவாறு, அனைத்தையும் தன் மெய்யில் தாங்கிக் கொள்ளும் வீரன், தான் அவ்வாறு நின்று காப்பதற்கு முன்பே, “அவ்வாறு காப்பேன்!” எனக் கூறுவதும் உண்டு ஆதலின், பு.வெ. மாலையார், "ஒரு குடை மன்னனைப் பல குடை நெருங்கச் செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே!” என்ற