பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 249 விளக்கத்தோடு, 'முன் எழுதரு படை தாங்குவன் என மன்னவற்கு மறம் கிளந்தன்று” என்ற விளக்கத்தையும் இத்துறைக்குப் பொருந்தும் எனக் கொண்டுள்ளார். தபுதிப் பக்கம்: தும்பைப் போர், வெற்றிப் புகழ் மீது கொண்ட வேட்கை மிகுதியால் எழும் போராதலின், இரு திறத்தவரும் தம் உயிர் உள்ளளவும் நின்று போராடவே விரும்புவர். தாம் உயிரோடிருக்க, பிறர் தம்மை வெற்றி கொள்வதை அவர் விரும்பார். இது இரு திறத்து வேந்தர்க்கும் பொதுவியல்பாம் ஆதலின், தும்பைப் போரின் முடிவு, பெரும்பாலும் இரு வேந்தர்களும் ஒரு களத்து அழிவதாகவே இருக்கும். படைத் தலைவராகத் தாம் பணியாற்றியிருக்கும் போது, தம் வேந்தர்க்கு இழப்பு நேர்வதைப் படைத் தலைவர் பொறார் ஆதலின், வேந்தர் களம் புகுந்து போராடத், தாம் வாளா இருப்பது செய்யார். படைத் தலைவர் பண்பு இதுவாகவே, ஒரு வேந்தனைக் காக்க, அவன் படைத் தலைவன் களம் புகுந்து கடும் போர் இடுகின்றனன் என்றால், மாற்றார் படைத் தலைவனும் களம் புகுந்து போராடுவான் என்பது சொல்லாதே அமையும். ஆகவே ஒரு வேந்தனை, மற்றொரு வேந்தன் அழிக்க எண்ணினால், அது, அவன் படைத் தலைவனை அழித்த பின்னரே இயலும்; ஆகவே, வேந்தர் இருவரும் அழிவதன் முன்னர், அவ்விரு வேந்தர்களின் படைத் தலைவர்களும் போராடி அழிவர். கழுமலம் என்னும் இடத்தில், சேரமான் கணைக் கால் இரும்பொறைக்கும், சோழன் செங்கணானுக்கும் நடைபெற்ற போரில், செங்கணான், சேரனை வென்று