பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 251 பெருவேந்தரும் அழிவுறும் அந்நிலை, "இரு பெரும் வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகை நிலை" என்ற விளக்கத்தோடு, தொகை நிலை என்ற பெயரால், பின்னர்த் தனியே கூறப் பெறுதலாலும், தார்நிலை என்ற இத்துறை, படைத் தலைவர்கள் படுவதைக் கூறுவதேயாம். "இருவர் தலைவர் தபுதிப் பக்கம்” என இப்பொருள் தெளிவாகப் புலப்படும் வகையில், தொல்காப்பியர் விளக்கியிருப்பதும் உணர்க. ஆகவே, தொல்காப்பியனாரின் இவ்விளக்கத்தை உணர மாட்டாது, இருவரும் தபுதி நிலையாவது, 'பொருபடை களத்து அவிய இரு வேந்தரும் இயல் அவிந்தன்று" (பு.வெ. மாலை: கொளு. 138) என ஐயன் ஆரிதனார் கூறும் விளக்கம் தும்பைத்திணை இயல்பிற்கே முற்றிலும் முரண்பட்டதாம் எனக் கொள்க. கூழை தாங்கிய எருமை: வேந்தர்க்குத் துணை போகும் வீரர்கள் அவ் வேந்தர்கள் உயிரிழந்து போகும் நிலை பிறப்பதன் முன்னர்த் தாம் அவர் பெருட்டுப் போராடி உயிரிழந்து போவது, புகழ்மிகு செயலே ஆயினும், அவ்வாறு அவர் உயிரிழந்து போவதற்கு மாறாக, அவரும் தாமும் உயிரோடிருந்து, எண்ணியாங்கு முடிக்கும் திண்மை யுடையவராய் விளங்கும் வகையில், மாற்றார் படையை வென்று மண்ணாக்குவதே மாண்புடைமையாம் ஆதலின் அவ்வாறு உயிரிழந்து செஞ்சோற்றுக் கடன் கழித்துச் சிறப்புறும் நிலையினைக் கூறும் துறையினை அடுத்து, அவ்வீரர்கள் தம் படையைக் காப்பதும், பகைப் படையைப் பாழ் செய்வதுமாகிய வீரச் செயல்களை விளக்கும் துறைகளைக் கூறுவது முறையாம் ஆதலின், தபுதிப்