பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 இ. புலவர் கா. கோவிந்தன் நிலை நாட்டுதல் இயலும். ஆகவே, அவ்வாற்றல் வாய்ந்த வீரனைப் பாராட்டும் ஏமம் என்ற இத்துறை எருமைத் துறையை அடுத்து இடம் பெற இலக்கணம் வகுத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை மீது நீல நிறக் கச்சு கட்டி, மயிற் பீலிக் கண்ணி சூடிக் களம் புகுந்து போராடுங்கால், தான் கையிலேந்தி வந்த வேற்படையைக் கடுஞ்சினத்தோடு தன்மீது பாய வந்த கொல்களிற்றின் மீது எறிந்து வெற்றி கொண்டு கைப்படையின்றிக் களத்தில் நின்ற தன்மீது, பகைப் படையணியைச் சேர்ந்த வேல் வீரர்கள் களிற்றுப் படையோடு பாயக் கண்டும் கலங்காது நின்று, அவர் எறியும் வேல்களைப் பற்றி அவர் மீதே எறிந்தும், அவர் தம் தானைத் தலைவனைத் தன் தோளோடு தோளாகத் தழுவித் தன் மெய் வலியால் உயரத் துரக்கி நிலத்தில் மோதியும் அவன் உயிரைப் போக்கி, உயிர்போன அவ்வுடலைச் சுமந்தவாறே களத்தில் வேள்வி செய்து, புலவர் உலோச்சனாரின் பாராட்டைப் பெற்ற வீரன் இத்துறைக்கு இணையிலா எடுத்துக் காட்டாவன். "நீலக் கச்சைப் பூவார் ஆடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன், மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து, இனியே தன்னும் துரக்குவன் போலும்! ஒன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பின் ஊக்கி மெய்க் கொண்டனனே." -புறம் 274 பு:வெ. மாலையார், இதற்கு ஏம எருமை எனும் பெயர் சூட்டி, "குடை மயங்கிய வாளமருள் படை மயங்கப் பாழி கொண்டன்று," என விளக்கம் கூறுவர்.