பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 255 பாடு: படைக் கலத் துணையற்ற போதும் வெற்றி காண்பது வீரனுக்கு அழகாம் என்ற உயர்ந்த உணர்வோடு களம் புகும் வீரன், ஆங்குப் பகைவனின் நால்வகைப் படையணிகளுள், வேழப் படை அழிந்தால் பிற படையணி இல்லாகி விடும் என்னுமளவு தலை சிறந்ததும், தாக்கும் போரேயாயினும் தாங்கும் போராயினும் முன் அணியுள் நின்று போராடு வதும் ஆகிய களிற்றுப் படையினை வெற்றி கொள்ளவே விரும்புவன். ஆகவே, அவ்வெற்றியைப் பாராட்டும் மாடு என்ற துறை, ஏமம் துறையை அடுத்து இடம் பெற விதி வகுத்துள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். "இந் நிலவுலகத்தையே அளந்து காணப் புறப்பட்டது போல், மிகக் குறுகிய வழியிலும், நில்லாது விரைந்தோடும் தன் குதிரையின் போர்ப் பண்புகளைப் பாராட்டியவாறே, இரவுப் போது வந்துற்றமையால் தன் பாசறை புகுந்த அவ்வீரன், உங்கள் வேந்தன் ஊர்ந்து வரும் அரச யானையை வீழ்த்துவதற்கல்லது, அதற்குக் குறைந்த ஆற்றல் உடைய பிற படைமீது படைக்கலம் தொடாப் பெருவீரன் ஆவன்; ஆகவே, பகைவர்காள்! நால்வகைப் படைகளை நனிமிகப் பெற்றவர் யாம் எனச் செருக்கித் திரியாதீர்கள்." என ஆவூர் மூலங்கிழாரால் பாராட்டப் பெறும் அவ்வீரன்பால், தொல்காப்பியர் கூறும் பேராண்மை பொருந்தியிருப்பது உணர்க. - "பலம் என்று இகழ்தல் ஒம்புமின், உதுக்காண்; நிலன் அளப்பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்பு பாராட்டி எல்லிடைப் படர் தந்தோனே, கல்லென