பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 257 பழிப்பது முறையேயல்லது பாராட்டுவது முறையாகாது. தும்பைத் திணையின் இவ்வியல்புணர்ந்தவர் தொல் காப்பியர் ஆதலின், வேந்தன் வேழத்தோடு வீழ்ந்து இறக்கும் செயலையும், அவ்வாறு வீழ்ந்தானை வளைத்துக் கொண்டு வென்ற வீரர் பாடி ஆடும் செயலையும் ஒரு துறையிலேயே அடக்கித் தும்பைத் திணையின் பண்பு கெடாவாறு காத்துள்ளார். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் படைப் பெருமை யினையும், தம் அறியாமையினால் தம் படைச் சிறுமையினையும், உணரமாட்டாது, போர் முரசு முழக்கி, வாளேந்திக் களம் புகுந்த வேந்தர்கள் அவனால் அழிவுண்டு, இவ்வுலக வாழ்வை மறந்து, மடிந்து வீழ்ந்து கிடக்கும் போர்க்களத்தில், அவரை வெற்றி கொண்ட களிப்பால் ஆடவும் பாடவும் வல்லவனேயல்லது, விழா நிகழும் தலைநகரில், கூத்தாடுவார் எழுப்பும் முழவோ சைக்கு ஏற்ப அடியிட்டு ஆடவும் பாடவும் வல்லனல்லன் எனக் காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரால் பாராட்டப் பெறும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தொல்காப்பியர் வகுத்த இத்துறையின் இலக்கணத்திற்கு இனிய இலக்கியமாதல் காண்க. - 'விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன்: வாழ்க அவன் கண்ணி! வலம்படு முரசம் துவைப்பவாள் உயர்த்து இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன், மடம் பெருமையின் உடன்று மேல்வந்த வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி விந்துகு போர்க்களத்து ஆடும் கோவே' -பதிற்றுப்பத்து 58. பத.போ.நெ-17