பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இ. புலவர் கா. கோவிந்தன் வந்து போராடி வீழ்ந்த வேந்தனை, வென்ற வாள் வீரர்கள் சூழ்ந்து ஆடுவதே இத்துறையின் இயல்பாம் என்றாலும், பு.வெ. மாலையார், வீழ்ந்தானைப் பாராட்டும் துறையினைத் தனியே கொண்டு விட்டமையால், ஈண்டு, வென்றவர், வீழ்ந்தானைச் சூழ்ந்து கொண்டு ஆடிப் பாடுவது என விதந்து கூறாமல், வென்றவர் ஆடிப்பாடுவது என வாளா கூறி இடர்ப்படுவாராயினர். தொகை நிலை: இருவர் தலைவர் தபுதிப் பக்கம் என்ற துறை விளக்கத்தின் கண் கூறியவாறு, தும்பைப் போர் மேற் கொண்ட இரு திறத்தவருமே தம் ஆண்மை ஆற்றல்கள் மட்டுமே உலகோரால் போற்றப்படுதல் வேண்டும், தமக்கு ஒப்பாகவோ உயர்ந்தோ பிறர் எவரும் வாழ்தல் கூடாது என்ற உணர்வினால் உந்தப்பட்டவராதலின், ஒருவர் வெற்றி பெற, மற்றொருவர் தோல்வியுறும் நிலை, இப்போர் நிகழ்ச்சியில் உண்டாதல் இல்லை. அதனால், போர் நிகழ்ச்சியின் இடையிடையே வெற்றி தோல்விகள் மாறி மாறிவரினும், போரின் முடிவு இரு திறத்துப் படைகளும், இரு திறத்துப் படைத் தலைவர்களும், இரு திறத்து அரசர் களும் அறவே அழிவதாகவே அமையும். அந்நிலையைக் கூறுவதே இத்துறை. தும்பைத் திணை தம் ஆற்றல் காட்ட மேற்கொண்ட போராதலின், களம் புகுந்தாருள், எவரும் பிறர்படை கண்ட அளவே, கலங்கி உயிர் விடுவாரல்லர்; தம்மால் பகைப் படையை எவ்வளவு அழிக்க இயலுமோ அவ்வளவும் அழித்துவிட்டுத் தம் கைப்படை அற்றுப் போன நிலையிலும் புறங்காட்டிவிடாது, தம் மெய்வலி கொண்டு,