பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 259 உணர்வற்று உடல் சாயும் வரையும் போராடுவராதலின், அக்களப் போர் ஆற்றிய ஒவ்வொருவரும் வாளால் வெட்டுண்டும், வேலால் எறியுண்டும் பெற்ற புண்ணிறை மெய்யினராகவே வீழ்ந்து கிடப்பர். இந்நிலையெலாம் நன்கு விளங்கும் வகையில், "வாள் வாய்த்து இரு பெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகை நிலை” என இத்துறைப் பொருளை விளக்கியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். "களம் புகுந்த களிறுகளின் எண்ணிக்கை எவ்வளவு பெரிதாகியும் என்ன பயன் பகை வீரரின் வேலேறுண்டு, வீறு இழந்து வினையாற்ற இயலாது, ஒன்று ஒழியாது வீழ்ந்து விட்டனவே! காற்றெனக் கடுகிக் களம்புகுந்த குதிரைகள் தாம், எவ்வளவு போர் மாட்சியுடையவாயிருந்தும் என்ன பயன்? நம் மீது ஊர்ந்து வந்த ஆற்றல் மிகு மறவர்களோடு தாமும் இறந்து வீழ்ந்து விட்டனவே! தேரேறி வந்த தலைவரெல்லாம் ೯7ಮ೧೧TQ) பேராற்றல் உடையவராகியும் யாது பயன் தம் கையில் தாங்கிய தோற் படைகள் தம் மெய்களை மறைக்கத் தத்தம் தேர்த்தட்டுகளிலேயே இறந்து வீழ்ந்து விட்டனரே! போர் முரசு, கொல்லேறு இரண்டைப் பொரவிட்டு, வென்றதைக் கொன்று கொண்ட தோலை வார் கொண்டு ஈர்த்து வலித்துப் பண்ணிய பெருமை யுடையதாகியும் என்ன பயன் முழக்குவாரின்றி முடம்பட்டுக் கிடக்கலாயிற்றே! போர் மேற்கொண்டு வந்த அரசர்கள் தாமும், மார்பில் மணங்கமழும் சாந்து பூசி மகிழும் முடிமன்னராயிருந்தும் என்ன பயன் வேலெ றுண்ட மார்பினராகி ஒரு சேரமடிந்து மண்ணில் சாய்ந்து விட்டனரே! இனிக், கன்னி இளம் மகளிர், ஆம்பல் கொடியை அழகு வளையலாக்கி அணிந்தும், பதம் பெற