பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 வெற்றியும் பாராட்டும் பகைவன் கவர்ந்து சென்ற தன் நாட்டு ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வர மேற்கொண்ட போரில் பெற்ற வெற்றி, பகைவன் தனதாக்கிக் கொண்ட தன் நாட்டு எல்லைப் பகுதிகளை மீட்க மேற்கொண்ட போரில் பெற்ற வெற்றி, பகைப்படை மேற்கொண்ட முற்றுகையை முறி யடித்துத், தன் அரணை அழிவுறாது காக்க மேற்கொண்ட போரில் பெற்ற வெற்றி, ஆணவம் கொண்டு வந்தானின் செருக்கடக்க மேற்கொண்ட சமரில் பெற்ற வெற்றி என்ற, தொடக்க நிலை காலத்தனவாய வெற்றிகளும், தன் நாட்டவர் பசி போக்குவதும், தன் நாட்டில் பெருகிய மக்கள் தொகைக்கு இடம் தேடுவதும், பிறர் நாட்டுப் பொன்னாலும் நவமணிகளாலும் தன் நாட்டுச் செல்வத்தைப் பெருக்க வேண்டுவதும், தன ஆற்றலை உலகமெல்லாம் போற்றச் செய்வதும் ஆகிய இவைபோல் வனவும் அரசர்களின் கடமைகள்தாம் எனக் கருதப்பட்ட காரணத்தால், பகை நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வரச்சென்ற போரில் பெற்ற வெற்றி, பகைநாட்டின் ஒரு பகுதியைத் தன் நாட்டோடு இணைத்துக் கொள்ள மேற்கொண்ட போரில் பெற்ற வெற்றி, பொன்னும் நவமணியும் போலும் அரும் பொருள்களை ஈட்டி