பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இ. புலவர் கா. கோவிந்தன் வைத்திருக்கும் பகை நாட்டு அரணைக் கைப்பற்றிக் கொள்ள மேற்கொண்ட போரில் பெற்ற வெற்றி, தன் ஆண்மை ஆற்றல்களை உலகத்தவரெல்லாம் கண்டு உளம் நடுங்க வேண்டும் என்ற கருத்தோடு மேற்கொண்ட போரில் பெற்ற வெற்றி என்ற பிற்காலத்தனவாய வெற்றிகளும் மெய்வலி காட்டிப் பெற்ற வெற்றிகளாம். வெற்றியாவது தனக்கு ஒத்தது என ஏற்றுக் கொண்ட ஒரு கொள்கையில்-ஒர் ஒழுக்கத்தில் அக்கொள்கையும் ஒழுக்கமும் உடைய பிறரைக் காட்டிலும் தானே உயர்ந்த வனாம் என்ற சிறப்புடைமையாகும். அச்சிறப்பு, மெய்வலி காட்டுவது ஒன்றை மட்டுமே ஒழுக்கமாகக் கொண்ட அரசர்கள் மேற்கொள்ளும் போரில் மட்டுமே பெறலாகும் ஒன்றன்று; மக்கள் வாழ்வின் தொடக்க நிலையில், அம் மக்களின் தேவை, உணவு உறையுள் என்ற அளவிலேயே நின்று விட்டமையால், அவற்றைக் காப்பது ஒன்றே கடமையாம் என மன்னனும் மக்களும் கருதினர்; அதனால் காத்தல் தொழிலுக்கு வேண்டிய மெய்வலியை அக்கால மக்கள் பெரிதும் மதித்தார்கள். அத்துறையில் ஒருவரின் ஒருவர் உயர்ந்து விளங்க விரும்பினார்கள்; அதனால் அத்துறையில் பெறலாகும் உயர்வு ஒன்றிற்கே, அக்கால மக்கள், வெற்றியெனும் பெயர் சூட்டினார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல மக்களின் தேவைகள் வளர்ந்தன; அவை வளரவே. அவர்களின் கடமையும், அக்கடமைகளை நிறைவேற்றும் வாயில்களும் வளர்ந்தன. அதனால் அந்தத் துறைகளிலும் சிறந்தாராய் விளங்க வேண்டும் என்ற வேட்கை யுடையராகி, அவற்றிலும், ஒருவரின் ஒருவர் உயர்ந்து விளங்க முனைந்ததன் பயனாய்ப் போரில் பெறலாகும் சிறப்பு