பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 இ. புலவர் கா. கோவிந்தன் 'வாகை தானே பாலையது புறனே; தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப." "கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும், ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும், தேரோர் வென்ற சேரமான் முன் தேர்க் குரவையும், ஒன்றிய மரபின் பின் தேர்க் குரவையும், பெரும்பகை தாங்கும் வேலினானும், அரும் பகை தாங்கும் ஆற்றலானும், புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும், ஒல்லார் நானப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல் உயிர் வழங்கிய அவிப்பலி யானும், ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும், பகட்டி னானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும், கட்டில் நீத்த பாலினானும், எட்டுவகை நுதலிய அவையத் தானும், கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும், இடையில் வண்புகழ்க் கொடைமை யானும், பிழைத்தோர்த் தாங்கும் காவ லானும், பொருளொடு புணர்ந்த பக்கத்தானும், அருளெடு புணர்ந்த அகற்சியானும், காமம் நீத்த பாலினானும், என்று 姜 இருபாற் பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே." பகைவர் கவர்ந்து சென்ற ஆனிரைச் செல்வத்தை மீட்டுக் கொணர்வதும், பகைவர் தமதாக்கிக் கொண்ட தன்